For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேஸ்புக்கில் சென்சார் காட்டுது.. கிராமத்தின் பெயரையே மாற்ற முடிவெடுத்த ஸ்வீடன் மக்கள்

பேஸ்புக்கில் சென்சார் காட்டுவதால் தங்களது கிராமத்தின் பெயரையே மாற்ற முடிவெடுத்துள்ளனர் ஸ்வீடன் கிராம மக்கள்.

Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: பேஸ்புக்கில் தங்களது கிராமத்தின் பெயரைப் போட்டால் ஆபாசமான வார்த்தை என சென்சார் செய்யப்படுவதால், ஊரின் பெயரையே மாற்ற வேண்டும் என்ற வினோதமான போராட்டத்தில் இறங்கியுள்ளனர் ஸ்வீடனில் உள்ள ஒரு கிராமத்தினர்.

எதிர்நீச்சல் படத்தில் தனது பெயரை வெளியில் சொல்ல முடியாமல் ரொம்பவே அவதிப்படுவார் சிவகார்த்திக்கேயன். கடைசியில் தனக்குப் பிடித்தமாதிரி ஒரு பெயராக அவரே வைத்துக் கொள்வார். பெயரால் அவர் சங்கடத்திற்கு ஆளாகும் காட்சிகள் படத்தில் நகைச்சுவையாக இருக்கும். நிஜத்திலும் இப்படி பெயரை வெளியில் சொல்ல கூச்சப்படுபவர்கள் ஏராளம்.

பிக் பாஸ் சீசன் 5: பல நேரங்களில் அமைதியாக இருப்பதற்கு காரணம் இதுதானா??ராஜுவின் கண்ணீர் கதைபிக் பாஸ் சீசன் 5: பல நேரங்களில் அமைதியாக இருப்பதற்கு காரணம் இதுதானா??ராஜுவின் கண்ணீர் கதை

தனிப்பட்ட ஒருவரின் பெயர் என்றால், சத்தமில்லாமல் அதனை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒரு ஊரின் பெயரால் அங்கு வசிக்கும் மக்களே அவதிப்படுகிறார்கள் என்றால் கேட்க ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா..

பெயர் பிரச்சினை

பெயர் பிரச்சினை

ஸ்வீடனில் உள்ளது அந்த கிராமம். Fuckesjön ("Fucke Lake") என்ற நதிக்கரையில் அமைந்துள்ளதால், அந்த கிராமத்திற்கும் F****e என்ற அந்த நதியின் முதல் வார்த்தையையே பெயராக வைத்து விட்டார்கள் அந்நாட்டு முன்னோர்கள். இணையம், சமூகவலைதள ஆதிக்கம் போன்றவை அதிகம் இல்லாத அந்நாட்களில் இப்பெயர் அக்கிராமவாசிகளுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை.

 சென்சார்

சென்சார்


தங்கள் ஊரின் பெயரை வெளியில் சொல்லவே கூச்சப்படுகிறார்களாம் அக்கிராம மக்கள். சமீபகாலமாக பேஸ்புக்கில் தங்கள் ஊரின் பெயரைப் பதிவு செய்தால், அது சென்சார் செய்து ஆபாசமான வார்த்தை எனக் கூற, பொங்கி எழுந்துவிட்டனர். இதனால் தங்கள் ஊரின் பெயரை எப்படியும் மாற்றியே தீருவது என தீவிர போராட்டத்தில் இறங்கி விட்டனர்.

புதிய பெயர் தேவை

புதிய பெயர் தேவை

தங்கள் ஊரின் பெயரை மாற்றித் தரும்படி அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். டால்ஸ்ரோ என்ற புதிய பெயரை தங்கள் கிராமத்திற்கு சூட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டால்ஸ்ரோ என்றால் அமைதியான பள்ளத்தாக்கு என்பது பொருள் ஆகும்.

பிடிவாதம்

பிடிவாதம்

கடந்த சில மாதங்களாக இந்தப் பெயர் மாற்றத்திற்காக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் அக்கிராம மக்கள். போராடும் அளவிற்கு அந்தப் பெயர் ஆபாசமானதில்லை என சிலர் விளக்கங்கள் கொடுத்தாலும், சமூகவலைதளங்களில் அதனைப் பயன்படுத்த முடியவில்லை என்ற காரணத்திற்காகவே அதனை எப்படியும் மாற்றியே ஆக வேண்டும் என பிடிவாதமாக உள்ளனர் அக்கிராமத்தினர்.

English summary
Residents of Swedish village complained that they faced censorship on social media when writing about their village.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X