For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 லட்சம் வெளிநாட்டு பார்வையாளர்கள்... 4,50,000 காண்டம்கள்... இது ரியோ ஒலிம்பிக் சுவாரஸ்யம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ரியோ டி ஜெனிரோ: உலக விளையாட்டு ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் அழகிய நகரமான ரியோ டி ஜெனிரோவில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த ஒலிம்பிக் விளையாட்டில் சில சுவாரஸ்யங்கள் இடம் பெற்றுள்ளன.

பிரேசில் நாட்டில் தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட அதிபர் தில்மா ரவ்செஃப் மற்றும் தற்காலிக அதிபரான மைக்கேல் டேமேர் இருவரும் ஒலிம்பிக் விளையாட்டு திறப்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 5 முதல் 21 வரை நடக்கும் விளையாட்டுகளில் 206 நாடுகள் பங்கேற்கின்றன. 17,000 ஒலிம்பிக் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு. அகதிகள் குழு ஒன்றும் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்கிறது.

Rio Olympics 2016 - 7.5 million - Tickets on sale

4,50,000 காண்டம்கள்

4,50,000 காண்டம்கள், 11,000 வீரர்கள், ஒரு வீரருக்கு ஒரு நாளைக்கு இரண்டு காண்டம்கள் அல்லது மொத்த எண்ணிக்கையில் 41 காண்டம்கள் வழங்கப்படும். இது லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது அளிக்கப்பட்டதை விட 3 மடங்கு அதிகம் என்று ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

பெண்களுக்கும் இருக்கு

இதில் 1,0000 காண்டம்கள் பெண்களுக்கானதாம். 3,50000 காண்டம்கள் ஆண்களுக்கானதாம். 1,75,000 லூப்ரிகென்ட் பாக்கெட்டுகளும் சப்ளை செய்யப்பட உள்ளதாம்.

செய்தியாளர்கள் வருகை

25,000 பத்திரிக்கையாளர்கள் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை கண்டு தகவல்களை சேகரிக்க வருகின்றனர். 5,00,000 பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிக்கெட்டுகள் விற்பனை

7.5 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனைக்கு உள்ளது. 78,000 பார்வையாளர்கள் பங்கேற்கும் வகையிலான மரகானா ஸ்டேடியத்தில் திறப்பு விழா மற்றும் நிறைவு விழா நடக்கிறது.

மெடல் வாங்காத பிரேசில்

112 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோல்ஃப் இந்த ஒலிம்பிக்கில் இல்லை. ரக்பி செவன் வீரர்கள் ஒலிம்பிக்கில் முதன் முறையாக பங்கேற்று விளையாட உள்ளனர். 400 கால்பந்துகள் பயன்படுத்தப்படும். இதுவரை கால்பந்து விளையாட்டில் ஜாம்பவானாக திகழும் பிரேசில் நாடு ஒருமுறை கூட மெடல் வாங்கவில்லை

சுரங்க மெட்ரோ பாதை

10 மைல் தொலைவிற்கு சுரங்க மெட்ரோ பாதை சிறப்பாக இந்த விளையாட்டுக்கென அமைக்கப்பட்டு உள்ளது. ரியோவைச் சுற்றிய நான்கு மண்டலங்களில் விளையாட்டுக்கள் நடைபெறும்

60,000 உணவுகள்

5 ஜம்போ ஜெட்டுகளை நிறுத்தும் அளவிற்கு அந்த உணவு அருந்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. 60,000 உணவுகள் தினமும் பரிமாறப்படும் 80,000 இருக்கைகள் ஒலிம்பிக் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகள்

31 டவர் பிளாக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள 3,604 குடியிருப்பு அடுக்குமாடி வீடுகள் ஒலிம்பிக் விளையாட்டுக்கு பின்னர் விற்கப்படும்.61 சதவீத ரியோ மக்கள் இந்த விளையாட்டை வரவேற்றும் மீதமுள்ள 27 சதவீதம் பேர் பிரச்சனை ஏற்படுமோ என்று அச்சம் தெரிவித்துள்ளனர்

English summary
About 450,000 condoms will be distributed during the Rio de Janeiro Olympics, three times more than for the London Games four years ago, the International Olympic Committee says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X