For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

0.38 விநாடிகளில் ரூபிக் க்யூப் தீர்த்து உலக சாதனை படைத்த ரோபோ... ஆச்சர்யத்தில் மனிதர்கள்!

ரூபிக் க்யூப் புதிரை அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் தீர்த்து ரோபோ ஒன்று உலக சாதனை புரிந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கனசதுரதப் புதிரை 0.38 விநாடிகளில் தீர்த்து உலக சாதனை படைத்த ரோபோ...வீடியோ

    நியூயார்க்: அமெரிக்காவில் மென்பொறியாளருடன் இணைந்து ரோபோட்டிக் மாணவர் உருவாக்கியுள்ள ரோபோ ஒன்று ரூபிக் க்யூப் எனப்படும் கனசதுரதப் புதிரை அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் தீர்த்து அசத்துகிறது.

    அமெரிக்காவின் கேம்பிரஜ் நகரில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் எந்திரவியல் மாணவர் பென் காட்ஸ் மற்றும் மென்பொறியாளர் ஜார்ட் டி கார்லோ ஆகிய இருவர் இணைந்து ரோபோ ஒன்று உருவாக்கியுள்ளனர்.

    robot solves rubik cube

    இந்த ரோபோவின் தனிச்சிறப்பு என்னவென்றால், மிக எளிதில் தீர்க்க முடியாத ரூபிக் க்யூப் என்படும் கனச்சதுரப் புதிரை விரைவாக தீர்க்கிறது. அதாவது, ஒரு மனிதனால் இந்த ரூபிக் க்யூப்பை 4.90 விநாடிகளில் தீர்த்ததுதான் இதுவரை உலக சாதனையாக உள்ளது. இதனை முன்னதாக ரோபோ ஒன்று 0.637 விநாடிகளில் முறியடித்திருந்தது.

    தற்போது இந்த சாதனைகளை அதிரடியாக முறியடித்துள்ளது இந்தப் புதிய ரோபோ. இது தொடர்பான வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டது. அதனை இதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.

    இந்த ரோபோவானது ஆறு மோட்டார்கள், ஆறு மோட்டார் டிரைவர்கள் மற்றும் இரண்டு ப்ளே ஸ்டேசன் ஐ கேமரா ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    English summary
    A robot built by a robotics student and a software developer has (unofficially) broken the world record by solving a Rubik's Cube in an astounding 0.38 seconds.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X