For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரோபோக்கள் உடனான செக்ஸ் மனிதர்களை அடிமைப்படுத்தும்: எச்சரிக்கும் நிபுணர்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: தொழில்நுட்ப வளர்ச்சியால் எந்திரங்கள் உயிர் பெற்று வருகின்றன எனலாம். அந்த வகையில் ரோபோக்கள் மனிதர்களை இன்னும் சில காலங்களில் மிஞ்சும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மனிதர்களுக்கு பதிலாக செக்ஸ் ரோபோக்கள் முழுவதும் ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளதாகவும் ரோபோடிக்ஸ் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

மனிதனின் அரிய கண்டுபிடிப்பு ரோபோக்கள். மனித சமுதாயத்திற்கு ரோபோக்கள் பல்வேறு வழிகளில் உதவி வருகின்றன. முடியாத முதியவர்களுக்கு உதவுதல், ஆபத்தான இடங்களில் பணியாற்றுதல் என ரோபோக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படுகின்றன. கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், பார்வையை இழந்தவர்களுக்கும் ரோபோக்கள் உதவி வருகின்றன.

கடந்த நூற்றாண்டின் இறுதியில், பெரிய தொழிற்சாலைகள், மருத்துவம், அறுவை சிகிச்சை, விண்வெளி பயணம் உள்ளிட்டவைகளில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த வரிசையில், செக்ஸ் உணர்வு அதிகம் கொண்டவர்களை திருப்தி செய்யும் வகையில் ரோபோக்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. 'ட்ரூ கம்பானியன்' என்ற நிறுவனம் இந்த செக்ஸ் ரோபோவை தயாரித்துள்ளது.

உன்னை எல்லாம் பெத்தாங்களா? செஞ்ஞாங்களா என்ற கேள்வி கேட்பார்கள். அதேபோல நம்முடைய விருப்பத்திற்கு இனி நம்முடைய செக்ஸ் ரோபோ பாட்னர்களையும் வடிவமைத்துக்கொள்ளலாம்.

எந்திரன் சிட்டி

எந்திரன் சிட்டி

எந்திரன் படத்தில் தன்னை கடத்திக்கொண்டு போய் வைத்திருக்கும் 'சிட்டி' ரோபோவைப் பார்த்து நீ ஒரு மெஷின் என்று ஐஸ்வர்யா ராய் கூறுவார். அதற்கு ரோபோ, ‘நான் இப்போ முழு மனுஷன் ஆகிட்டேன். ஒரு மனுஷன் உனக்கு என்ன சந்தோஷத்தைக் கொடுக்க முடியுமோ, அத்தனை சந்தோஷத்தையும் என்னாலயும் கொடுக்க முடியும். உலகத்துலயே ரோபோவுக்கும் மனுஷனுக்கும் பிறக்கப்போற முதல் குழந்தையை நீ வயித்துல சுமக்கப் போற... ரோபோ சேபியன்' என்பார்.

செக்ஸ் ரோபோக்கள்

செக்ஸ் ரோபோக்கள்

எந்திரன் காதல் தற்போது நிஜமாகவே நிகழும் சூழ்நிலை உருவாகிவிட்டது. அழகிய, கவர்ச்சி மிக்க பெண்ணைப் போன்ற தோற்றத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ரோபோவின் பெயர் ராக்சி.சிந்தடிக் மென்தசை பொருட்களைக் கொண்டு செயற்கையான தோலால் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கும், தொடுவதற்கும் உண்மையான பெண்ணை போன்று உணரப்படும் இந்த ரோபோ, செயற்கை அறிவுத்திறனும் கொண்டது.

கம்யூட்டர் கட்டுப்பாட்டில்

கம்யூட்டர் கட்டுப்பாட்டில்

செக்ஸ் ரோபோவின் உள்ளே ஒரு லேப்-டாப் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டுள்ளது. ரோபோவை தொடும் போதே அதன் உள்ளே அமைக்கப்பட்டுள்ள உணர்வு கருவிகள் செயல்படத் தொடங்கி விடும். அதற்கேற்ப ரோபோ செயல்படுகிறது. உள்ளே பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர் மூலம் சத்தம் வெளிப்படுகிறது.
ஆனால், ரோபாவால் அதன் இஷ்டப்படி நகரவோ, தலை மற்றும் உதட்டை அசைக்கவோ முடியாது. அனைத்தையும் கம்ப்யூட்டர் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

விருப்பத்தை புரிந்து கொள்ளும்

விருப்பத்தை புரிந்து கொள்ளும்

செக்ஸ் ரோபோவை வடிவமைத்துள்ள டக்ளஸ் இனேஸ் கூறும் போது, "ஏ.வி.என்., அடல்ட் என்டர்டெயின்மென்ட் எக்ஸ்போ கண்காட்சியில் முதன் முதலாக செக்ஸ் ரோபோ ராக்சி காட்சிக்காக வைக்கப்பட்டது. ஆண்களின் விருப்பு, வெறுப்புகளை புரிந்து கொள்ளும் வகையில் ராக்சி ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைப்பு

விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைப்பு

தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள செக்ஸ் ரோபோவின் உயரம் 170 செ.மீ., எடை 54 கிலோ. வாடிக்கையாளர்கள், தங்களின் பழக்க வழக்கங்களையும், விருப்பத்தையும் முன்கூட்டியே கூறினால், அதற்கேற்ப செக்ஸ் ரோபோ வடிவமைத்து தரப்படும். ரோபோவின் கை, கால்கள் தானாகவே திரும்ப முடியாது.

திருப்திபடுத்தும் ரோபோக்கள்

திருப்திபடுத்தும் ரோபோக்கள்

பார்த்தல், பேசுதல், கேட்டல், உணர்தல் ஆகிய நான்கு வித உணர்ச்சிகளையும் இது வெளிப்படுத்தும். வாடிக்கையாளர் கால்பந்து குறித்து பேசினால், அது குறித்து அதுவும் பேசும். கிரிக்கெட் குறித்து பேசினால், அதுவும் திரும்ப பேசும். இப்படி, அனைத்து விஷயங்களிலும் வாடிக்கையாளரை இந்த ரோபோ திருப்திபடுத்தும்.

விலை எவ்ளோ தெரியுமா?

விலை எவ்ளோ தெரியுமா?

ரோபோவை திருப்பி வைத்தால் பேச தயாராகி விடும். செக்ஸ் ரோபோவை பெற, மூன்று லட்சத்து 15 ஆயிரம் ரூபாயுடன் மாத சந்தா கட்டணத்தையும் கட்ட வேண்டும். ஆண் செக்ஸ் ரோபோவும் தயாராகி வருகிறது; அதன் பெயர் ராக்கி ட்ரூ, என்று கூறியுள்ளார் அந்த ரோபோவை வடிவமைத்துள்ள டக்ளஸ் இனேஸ்
இன்றைய நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் செக்ஸ் ரோபோ விற்பனைக்கு வந்துள்ளது.மிக விரைவில், உலகின் அனைத்து பாகங்களிலும் இதன் விற்பனை துவங்கும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

இணையத்தில் பிரபலமாகும்

இணையத்தில் பிரபலமாகும்

ரோபோ பார்ட்னருடன் செக்ஸ் வைத்துக் கொள்கிறவருக்கு, நிஜ பார்ட்னருடன் உறவில் ஈடுபடுகையில் ஏற்படுகிற அனுபவம் அப்படியே கிடைக்குமாம்.
ரோபோக்கள் உடனான செக்ஸ் இனி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இன்னும் 20 ஆண்டுகளில் மனிதப் பெண்களுக்கு பதிலாக ஏராளமான ரோபோ பெண்கள்தான் பாலியல் தொழிலில் ஈடுபடுவார்கள் என்றும் இவர்கள் தீர்க்கதரிசனம் செய்து உள்ளனர் விஞ்ஞானிகள்.

பாலியல் விடுதிகள்

பாலியல் விடுதிகள்

ரோபோ பெண்களின் விபச்சார விடுதிகள் கண்களுக்கு தென்பட இருக்கின்ற நாள் தொலைவில் இல்லை என்று கூறி உள்ளார்கள். ஆனால் இது ஒரு நல்ல விஷயமாக இருக்கும் என்பது இவர்களின் அபிப்பிராயம். ஏனென்றால் பாலியல் தொழில் சம்பந்தப்பட்ட மனிதக்கடத்தல்கள் குறைந்து விடும் என்பதுடன் ரோபோ பெண்களால் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் தொடர்பான நோய்கள் ஏற்படாது என்றும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டி உள்ளார்கள்.

சோர்வடையா ரோபோக்கள்

சோர்வடையா ரோபோக்கள்

செக்ஸ் ரோபோக்கள் எப்போதும் கிடைக்கும் மற்றும் சோர்வடையாது என்பதால் மனிதர்கள் அதற்கு அடிமையாக வாய்ப்பு உள்ளது. மேலும் புரோகிராம் செய்து நம் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் பயன்படுத்தலாம். ஆனாலும் செக்ஸ் மருத்துவர்கள், ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு இது உதவும் என்றும் கூறுகின்றனர். செக்ஸ் பயன்பாட்டுக்கு பிறகு முழுவதுமாக ஸ்டெரிலைஸ் செய்யப்படும் என்பதால் எய்ட்ஸ், எச்ஐவி பரவும் அபாயம் முழுவதுமாக தவிர்க்கப்படும்.

ரோபோக்களுடன் வாழ்க்கை

ரோபோக்களுடன் வாழ்க்கை

மனித உறவுகளுக்கிடையே இடைவெளி அதிகமாகி வருவதும், தனிமை உணர்வும் சேர்ந்து மன அழுத்தத்தை உருவாக்குகின்றன. மன அழுத்தத்தைத் தவிர்க்க ஏதோ ஒரு விஷயத்துக்கு மனிதர்கள் அடிமையாகிறார்கள். நிஜ வாழ்வில் சக மனிதர்களுடன் பேசாத, பழகாத மனிதர்கள் கூட முகம் தெரியாத ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டரில் பலருடன் நட்பாக இனி திட்டாத, சண்டை போடாத ரோபோக்களுடன் வாழ்க்கை நடத்த தயாராகி விடுவார்கள் மனிதர்கள்.

என்னதான் ஆனாலும்

என்னதான் ஆனாலும்

விஞ்ஞான வளர்ச்சியில் என்னதான் ரோபோக்களுடன் குடும்பம் நடத்தினாலும் ரத்தமும், சதையும், உணர்வுகளும் நிறைந்தவர்களுடன் இணைந்து சின்னச் சின்னச் சண்டைகள், ஊடல்கள் பின்னர் கூடல்கள் என இருப்பதுதானே வாழ்க்கை. அந்த கொஞ்சலையும், கெஞ்சலையும் தவற விட மனிதர்கள் தயாராகி விடுவார்களா என்ன?

English summary
As scientists hold the world’s first conference on sex robots, one expert warns that making love to machines could become addictive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X