For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கானில் இந்தியா கட்டி கொடுத்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் மீது தலிபான்கள் தாக்குதல்

By Mathi
Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தானில் இந்தியா கட்டி கொடுத்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆப்கானிஸ்தானில் இந்தியா பல்வேறு கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ரூ152 கோடி மதிப்பில் தலைநகர் காபூலில் அந்நாட்டு நாடாளுமன்ற கட்டிடத்தை இந்தியா கட்டி கொடுத்தது.

Rocket fired at Afghanistan parliament

இதை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருந்தார். இந்த புதிய கட்டிடம் மீது இன்று தலிபான்கள் ராக்கெட்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இன்று காலை நாடாளுமன்ற கடிட்டம் நோக்கி 4 ராக்கெட்டுகளை வீசி தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்த தாக்குதல் சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்திய பிரதமராக பிரதமர் மோடி பதவியேற்றது முதல் ஆப்கானில் இந்திய தூதரகங்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியா நிதி உதவியுடன் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை தகர்க்கும் வகையில் தலிபான்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Four rockets fired towards new Afghanistan parliament building which was gift from India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X