For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோலாகலமாக நடந்து முடிந்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் திருமணம்! மாப்பிள்ளை தோழரான வில்லியம்!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் மெர்கல் திருமணம், பிரிட்டனின் வின்ட்சர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெற்றது

Google Oneindia Tamil News

பெர்க்ஷயர்: இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் மெர்கல் திருமணம், பிரிட்டனின் வின்ட்சர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி. 33 வயதான இவர் தன்னைவிட 3 வயது அதிகமான அமெரிக்க நடிகை மேகன் மார்கிலை காதலித்து வந்தார்.

இவர்களது காதல் திருமணத்துக்கு இளவரசர் ஹாரியின் பாட்டியும், இளவரசர் சார்லசின் தாயாருமான ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அவர்களது திருமணம் நிச்சயமானது.

இளவரசர் ஹாரி - மேகன் திருமணம்

இளவரசர் ஹாரி - மேகன் திருமணம்

இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு மேற்கே பெர்க்‌ஷயரில் அமைந்து உள்ள வின்ட்சார் கோட்டையில், 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று மதியம் இளவரசர் ஹாரி-மேகன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

விழாக்கோலத்தில் வின்ட்சர்

விழாக்கோலத்தில் வின்ட்சர்

இதனை முன்னிட்டு அந்நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த திருமணத்தை கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி நடத்தி வைத்தார். இந்த மணவிழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதற்காக 11.20 மணிக்கு ராணி குடும்பத்தினர் தேவாலயத்திற்குள் வந்தனர். அதைத்தொடர்ந்து திருமண ஆராதனை நடைபெற்றது

விமானங்கள் பறக்க தடை

விமானங்கள் பறக்க தடை

இந்த தேவாலயத்தினுள் 800 பேர் அமரும் வசதி உள்ளது. சுமார் 600 பேருக்கு அழைப்பிதழ் தரப்பட்டது. ஹாரி - மேகன் திருமணத்தை முன்னிட்டு வின்ட்சர் கோட்டையின் மீது இன்று விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.

டென்ட் கொட்டாய்கள்

டென்ட் கொட்டாய்கள்

திருமணம் முடிந்ததும், மணமக்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று பின்னர் வின்ட்சார் கோட்டைக்கு திரும்பினர். இதனால் அந்த வீதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மணமக்களை காண்பதற்காக ஏராளமான மக்கள் வீதிகளில் டென்ட் கொட்டாய்கள் அமைத்து தங்கியிருந்தனர்.

லண்டன் வயலட் பேக்கரி

லண்டன் வயலட் பேக்கரி

அதைத்தொடர்ந்து அங்கு செயின்ட் ஜார்ஜ் அரங்கத்தில் வரவேற்பு நடக்கிறது. வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் வெட்டும் கேக்கை லண்டன் வயலட் பேக்கரி தயாரித்துள்ளது.மாலையில் இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியருக்கு ஹாரியின் தந்தை இளவரசர் சார்லஸ் தனிப்பட்ட முறையில் வரவேற்பு அளிக்கிறார். இதில் மணமக்களும், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களும் பங்கேற்பார்கள்.

தந்தை ஸ்தானத்தில் சார்லஸ்

தந்தை ஸ்தானத்தில் சார்லஸ்

இளவரசர் ஹாரி, மேகன் மண விழாவில் மேகனின் தந்தை தாமஸ் மார்கில் கலந்துகொள்ளமாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டிருப்பதால் ஹாரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ், மணமகள் மேகனுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

மாப்பிள்ளை தோழரான அண்ணன்

மாப்பிள்ளை தோழரான அண்ணன்

தனது தம்பி ஹாரிக்கு மாப்பிள்ளை தோழராக அவரது அண்ணன் வில்லியம் கம்பீர உடையணிந்து வந்திருந்தார். அரச குடும்பத்தினர் அனைவரும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர். டென்னிஸ் வீராங்கணை செரினா வில்லியம்ஸ், இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஜேம்ஸ் கோர்டன் தன்னுடைய மனைவியுடன் திருமணத்திற்கு வந்துள்ளனர்.

English summary
Royal wedding: Prince Harry and Meghan Marriage held today in windsor castle. Lots of people gethered in Windsor castle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X