For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழர்களுக்காக பாடுபடும் ரியாத் தமிழ்ச் சங்கம்

Google Oneindia Tamil News

ரியாத்: சவூதி அரேபியாவில் தங்கி, அந்த நாட்டு அரசின் நிக்காதத் நடைமுறையால் பாதிக்கப்பட்டு நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு ரியாத் தமிழ் சங்கம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது.

இந்தியர்களுக்கு இந்தியன் பிரெடேர்நிட்டி பாரம் மாறலாக உணவு வழங்கும் உதவிகளும், அனைத்து கேரள அமைப்பு (NRK) மாறலாக தாயகம் திரும்பிச்செல்ல டிக்கட் ஏற்பாடுகளும் ரியாத் தமிழ்ச் சங்கம் செய்துவருகிறது.

RTS supports towards stranded Indians at Embassy provided shelters

கடந்த வாரம், தாயகம் சென்ற காரைக்குடியைச் சேர்ந்த ஏ. ஆர். ராஜாராம் என்பவருக்கு, பெயர் குறிப்பிட விரும்பாத தமிழர் ஒருவர் சென்னை வரை டிக்கட் வழங்கி உதவி செய்தார். அதனை ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பாக அனைத்து கேரள அமைப்புகளின் தலைவர்கள் முன்னிலையில் ரியாத்தமிழ்ச் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது.

இவர் சவூதி அரேபியா வந்து 21 வருடங்கள் ஆகிவிட்டது, முதல் 13 வருடங்கள் அவரின் கபீலிடம் வேலை பார்த்துள்ளார், பின்னர் முறையாக சம்பளம் கிடைக்காததால் கபீலை விட்டு ஓடிவந்து 8 வருடங்கள் ஆகி மொத்தத்தில் 21 வருடங்களாக விடுமுறையே செல்லாமல் தாயகமும் செல்ல முடியாமல் தவித்துள்ளார்.

நிக்காதத் சட்டத்தின் மூலம் அவருடைய பிரச்னைகளை தீர்த்துவைத்து கையில் இருந்த பணங்கள் அனைத்தும் செலவாகிய நிலையில் அவருக்கு டிக்கட் கொடுத்து கைச்செலவிற்கு 200 ரியாலும் கொடுத்து அனுப்பிவைத்தோம். உதவி செய்த அன்பருக்கு அனைவர் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்துடன் இதுவரையான வரவு செலவு கணக்குகள் உள்ளது. நாளை நடக்கவிருக்கும் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் பாரதிவிழாவில் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த முஹமது ராவுத்தர் சாகுல் ஹமீது என்பவருக்கு சென்னைவரை டிக்கட் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதுவரை வரவு 10,850 ரியால் வசூலாகியுள்ளதாகவும், உணவுக்காக ரூ. 4500 ரியால் செலவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Riyadh Tamil Sangam is extending all its supports towards stranded Indians at Embassy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X