For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தோனேசியா: எரிமலை மீண்டும் வெடித்தது; 20,000 பேர் வெளியேற்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துச் சிதறி சாம்பலை கக்கி வருவதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ரா தீவில் சீனாபங்ஸ் எரிமலை உள்ளது. சனிக்கிழமை இரவு இந்த எரிமலை வெடிக்க தொடங்கியது. சுமார் 50 தடவை வெடித்த அந்த எரிமலையில் இருந்து சாம்பல் மற்றும் நெருப்பு குழம்பு வெளியானது.

இன்று மீண்டும் எரிமலை வெடித்து சிதறுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் காற்றில் சாம்பல் பரவுகிறது. வானில் சுமார் 13 ஆயிரம் அடி உயரத்துக்கு பறக்கிறது.

Rumbling Volcano in Western Indonesia Erupts Again

இதனையடுத்து சீனாபங்ஸ் எரிமலை அருகேயுள்ள ஜிவாரா, பிந்து பெசி மற்றும் அதை சுற்றி 7 கி.மீட்டர் பரப்பளவில் வாழும் கிராம மக்கள் 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எரிமலை வெடித்ததில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

English summary
Authorities extended a danger zone around a rumbling volcano in western Indonesia on Sunday after it spewed blistering gas farther than expected, sending panicked residents streaming down the sides of the mountain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X