For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி மனைவி கத்தினால் “நோ” டென்ஷன்- செல்போன் சார்ஜ் ஆக யூஸாகும்!

Google Oneindia Tamil News

ஜார்ஜியா: செல்போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் இனி கவலைப்பட வேண்டியதில்லை. அதற்காகவே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு சாதனத்தை போனில் பொறுத்திவிட்டு அதை பார்த்து கத்தினால் சார்ஜ் ஏறிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின் மிகப்பெரிய பிரச்சனை பேட்டரி சார்ஜ் தீர்ந்து போவதுதான்.

இதை சமாளிப்பதற்கு பலர் இரண்டு போன்களை கையில் வைத்துக்கொண்டு அலைகிறார்கள். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

காகித ஒலிவாங்கி தயாரிப்பு:

காகித ஒலிவாங்கி தயாரிப்பு:

அதன் விளைவாக ஜார்ஜியா தொழில்நுட்ப பல்லைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஸ்டாம் அளவில் இருக்கும் காகித ஒலிவாங்கியை தயாரித்துள்ளார்கள்.

சத்தமா கத்துங்க:

சத்தமா கத்துங்க:

போனில் பொறுத்தப்பட்டிருக்கும் இந்த ஒலிவாங்கியை நோக்கி சத்தமாக கத்தும் போது காகிதத்தில் அதிர்வு ஏற்பட்டு அதன் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

செல்போன் “புல்” சார்ஜ் ரெடி:

செல்போன் “புல்” சார்ஜ் ரெடி:

இந்த மின் ஆற்றலை கொண்டு செல்போனை சார்ஜ் செய்துகொள்ள முடியும். ஆனால் இந்த குறைந்த அளவிளான மின் ஆற்றலை கொண்டு முழு பேட்டரியையும் சார்ஜ் செய்ய முடியாது.

ஏற்கும் அளவில் மாறுபடும்:

ஏற்கும் அளவில் மாறுபடும்:

உற்பத்தி செய்யப்படும் மின் ஆற்றலின் அளவானது ஒலிவாங்கியின் அளவை பொறுத்து மாறுப்படும். தற்போது ஒரு சதுர மீட்டருக்கு 121 மில்லிவாட்ஸில் உற்பத்தி செய்யப்படுகிறது.

சத்தம் கேட்டாலே போதும்:

சத்தம் கேட்டாலே போதும்:

தேவையில்லாமல் அதிக சத்தம் ஏற்படும் இடங்களில் இந்த வகையான ஒலிவாங்கியை வைத்து மின் உற்பத்தியிலும் ஈடுபடமுடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

English summary
Scientists have developed a postage stamp-sized microphone out of paper that could boost your phone’s battery using sound.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X