For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்து: அரசக்குடும்பத்தின் செல்போன் பேச்சுக்கள் ஒட்டுக்கேட்பு!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் மிடில்டன் மற்றும் இளவரசர் ஹரியின் செல்போன் பேச்சுக்கள் மற்றும் குறுந்தகவல்களை பிரபல செய்தி நிறுவனம் ஒன்று இடை மறித்து ஒட்டுக் கேட்டது அம்பலமாகியுள்ளது.

பிரபலங்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டு அதனை தனது பத்திரிக்கையின் மூலம் பரபரப்புச் செய்திகளாக வெளியிட்டது இங்கிலாந்து செய்தித்தாள் ஒன்று. வியாபாரத்தைப் பெருக்குவதற்காக செய்யப்பட்ட அப்பத்திரிக்கையின் திருட்டுத்தனம் அம்பலமானதால் அப்பத்திரிக்கை வெளி வருவது நிறுத்தப்பட்டு, அதன் மீது வழக்குத் தொடரப்பட்டது.

தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இங்கிலாந்து அரச குடுமத்தின் செல்போன் பேச்சுக்களும் ஒட்டுக் கேட்கப்பட்டது நிரூபணம் ஆகியுள்ளது.

நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட்....

நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட்....

இங்கிலாந்தின் பத்திரிகை உலக ஜாம்பவானான ரூபர்ட் முட்ரோச்சுக்கு சொந்தமான ஏராளமான ஊடகங்களில் ஒன்று "நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட்". முன்னொரு காலத்தில் இந்த பத்திரிகையில் பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களைப் பற்றிய ரகசியத் தகவல்கள் வெளிவந்தன.

ஒட்டுக்கேட்பு....

ஒட்டுக்கேட்பு....

சம்பந்தப் பட்டவ்ர்களே இத்தகவலைப் பார்த்து அதிர்ச்சியடைந்து தான் போனார்கள். காரணம் அவையனைத்தும் ரகசியமாக தொலைபேசியில் பரிமாறிக் கொள்ளப் பட்ட தகவல்கள். இதன் மூலம் பிரபலக்களின் தொலைபேசியை இடைமறித்து ஒட்டுக் கேட்டு செய்தி நிறுவனம் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வந்தது அம்பலமானது.

வழக்கு....

வழக்கு....

இந்த விவகாரம் அம்பலமாகியதையடுத்து, "நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட்" இழுத்து மூடப்பட்டது. அந்த பத்திரிகையின் அதிபர் ரூபர்ட் முட்ரோச் மற்றும் ஆசிரியர் குழுவினர் மீது லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணை....

விசாரணை....

தற்போது அந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்றைய விசாரணையின் போது, "நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட்"-டின் முன்னாள் செய்தி ஆசிரியரிடம் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணை நடத்தினர்.

வில்லியம்-கேட் உரையாடல்....

வில்லியம்-கேட் உரையாடல்....

அப்போது, கடந்த 2006-ம் ஆண்டு தனது காதலி கேட் மிடில்டனுடன் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் பேசிய உரையாடல்களின் ஒட்டுகேட்கப்பட்ட பதிவுகளை கோர்ட்டில் ஒலிபரப்பிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இது தொடர்பாக அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தினர்.

தாக்குதல் சம்பவம்....

தாக்குதல் சம்பவம்....

கோர்ட்டில் ஒலிபரப்பப் பட்ட தொலைபேசி பதிவில், இளவரசர் ராணுவ பணியில் இருந்த போது, ஒரு தாக்குதல் சம்பவத்தில் மயிரிழையில் தான் உயிர் தப்பிய நிகழ்ச்சியை காதலி கேட் மிடில்டனுக்கு சுவைபட விளக்கி பேசுவது பதிவாகியுள்ளது.

குறுந்தகவல்....

குறுந்தகவல்....

இதேபோல், ஒரு விடுமுறை காலத்தில் வேட்டைக்கு செல்ல திட்டமிட்டிருந்த வில்லியம், "நீயும் என்னுடன் வேட்டைக்கு வந்தால் நன்றாக இருக்கும்" என்று காதலி கேட் மிடில்டனுக்கு அனுப்பிய குறுந்தகவலும் இடைமறிக்கப்பட்டுள்ளது.

குறும்புத்தகவல்....

குறும்புத்தகவல்....

மேலும், ஹாரியின் செல்போனுக்கு அவரது முன்னாள் பெண் தோழி போல் அவரது சகோதரர் வில்லியம் குறும்புத்தனமாக அனுப்பிய மற்றொரு மெசேஜையும், 'நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட்'-டின் முன்னாள் செய்தி ஆசிரியர் ப்ரூக்ஸ் இடைமறித்து ஒற்றறிந்ததற்கான ஆதாரமும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

அதிர்ச்சி....

அதிர்ச்சி....

இங்கிலாந்து அரசக் குடும்பத்தினரின் செல்போன் பேச்சுக்களே இடைமறித்து ஒட்டுக் கேட்கப் பட்ட ஆதாரம் வெளியாகியுள்ளது அங்குள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The phones of Prince William's wife Kate Middleton and Prince Harry, Queen Elizabeth's grandson, were hacked by staff working for Rupert Murdoch's defunct News of the World tabloid, it was revealed in a London court on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X