For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிரியா மீது மீண்டும் தாக்குதல் நடத்திய ரஷ்யா.. ஒரே நாளில் 44 பேர் பலி!

சிரியாவில் புரட்சி படைகள் இருக்கும் கிராமத்தில் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சிரியா மீது மீண்டும் தாக்குதலை தொடங்கியது ரஷ்யா

    டமாஸ்கஸ்: சிரியாவில் புரட்சி படைகள் இருக்கும் கிராமத்தில் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் ஒரே நாளில் 44 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த மூன்று மாதத்தில் மட்டும் இதுவரை 2300 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

    Russia Air force attacks Syria rebel base, kills 44

    இந்த போர் இடையில் சில நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்தது. ஐநாவின் கடுமையான பேச்சுவார்த்தைக்கு பின் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகளை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் அமெரிக்கா மட்டும் இடையே சில சமயங்களில் சிரியா அரசு படைகள் மீது விமான தாக்குதல் நடத்தியது. ஆனால் சிரியா படை பதில் தாக்குதல் மட்டுமே நடத்தியது. சிரியா அரசு படைகளுக்கு ஆதரவாக இருக்கும், ரஷ்யா சில நாட்களாக அமைதி காத்தது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சிரியாவின் புரட்சி படைகள் இருக்கும் கிராமத்தில் ரஷ்யா விமான தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின் சர்தானா பகுதியில் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

    இதில் ஒரே நாளில் 44 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் 11 பெண்கள் 6 குழந்தைகள் அடக்கம். இதில் 60க்கும் அதிகமானோர் மோசமாக காயமடைந்துள்ளனர். இவர்கள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    Russia Air force attacks Syria rebel base, kills 44 including 11 women 6 children.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X