For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதுகில் குத்திய ஜிங்பிங்.. சீனாவின் செயலால் புடின் கோபம்.. உறவை முறிக்க ரெடியாகும் ரஷ்யா.. பின்னணி

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யா சீனா இடையே மொத்தமாக உறவு முறியும் நிலைக்கு சென்று உள்ளது. இரண்டு நாட்டு உறவு இதுவரை இல்லாத மோசமான நிலையை தற்போது அடைந்துள்ளது.

சீனாவிற்கு உலகில் இருக்கும் இரண்டு பெரிய நட்பு நாடுகள் என்றால் அது வடகொரியாவும், ரஷ்யாவும்தான். அமெரிக்க எதிர்ப்பு என்ற குடையின் கீழ் இந்த மூன்று நாடுகளும் ஒன்று சேர்ந்து இருக்கிறது. ஆனால் இந்த உறவில் தற்போது விரிசல் ஏற்பட தொடங்கி உள்ளது.

சீனாவுடன் தனது நட்பை எப்போதும் போல வடகொரியா தொடர்ந்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் ரஷ்யா - சீனாவின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து நிகழந்த சம்பவங்கள் இதை உறுதி செய்துள்ளது.

இன்னும் 2 வாரம்.. ரஷ்யாவில் தயாராகும் கொரோனா தடுப்பூசி ரெடி.. முதலில் டாக்டர்களுக்கு செலுத்தப்படும்இன்னும் 2 வாரம்.. ரஷ்யாவில் தயாராகும் கொரோனா தடுப்பூசி ரெடி.. முதலில் டாக்டர்களுக்கு செலுத்தப்படும்

என்ன செய்தது

என்ன செய்தது

அதன்படி முதலில் கொரோனா பாதிப்பு இருந்த போதே ரஷ்யா, சீனாவின் மீது லேசான குற்றச்சாட்டுகளை வைத்தது. கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம் என்று கூறவில்லை. ஆனால் அப்போதே அமெரிக்காவுடன் ரஷ்யா நெருக்கம் காட்டியது. அமெரிக்காவுடன் சேர்ந்தது செயலாற்றுவோம் என்று ரஷ்யா உறுதி கூறியது.அப்போதே சீன - ரஷ்யா இடையே இருந்த பல்லாண்டு உறவு கொஞ்சம் முறிய தொடங்கியது.

நெருக்கடி கொடுத்தது

நெருக்கடி கொடுத்தது

ரஷ்யா அமெரிக்காவுடன் நெருக்கமாவதை கண்டு கோபம் அடைந்த சீனா ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்க தொடங்கியது. ரஷ்யாவில் இருக்கும் நகரமான விளாடிவோஸ்டோக் நகரத்தை சீனா சொந்தம் கொண்டாட தொடங்கி உள்ளது. இந்த இடம் முதலில் சீனாவின் கட்டுப்பாட்டில் 1600களில் இருந்தது. ஆனால் அதன்பின் நடந்த இரண்டாம் ஓபியம் போரில் சீனா தோல்வி அடைந்தது. இதில் இந்த விளாடிவோஸ்டோக் பகுதியை ரஷ்யா கைப்பற்றியது. இதை சீனா மீண்டும் கேட்க தொடங்கி உள்ளது.

சண்டை வந்தது

சண்டை வந்தது

இந்த நிலம் எங்களுக்கு சொந்தம். ரஷ்யா இதையே அபகரித்து விட்டது. இதை மீண்டும் ரஷ்யா எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சீனா பிரச்சாரம் செய்து வருகிறது. சீனாவின் இந்த செயலால் ரஷ்யா அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுதான் சண்டை ஏற்பட முதல் காரணம். இந்த நிலையில்தான் சீனாவிற்கு ஏவுகணைகளை அனுப்ப முடியாது என்று ரஷ்யா மறுத்தது. சீனாவிற்கு எஸ்-400 வகை ஏவுகணைகளை அனுப்ப மாட்டோம் என்று ரஷ்யா உறுதியாக கூறியுள்ளது.

மொத்தமாக மறுப்பு

மொத்தமாக மறுப்பு

திடீர் என்று சீனாவிற்கு இந்த ஏவுகணைகளை விற்க போவதில்லை. இனி இதை சீனாவிற்கு விற்க போவதில்லை, அதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த திடீர் முடிவிற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் ரஷ்யாவின் இந்த முடிவு சீனாவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ரஷ்யா இந்த முடிவை சுயமாக எடுக்கவில்லை என்று சீனா கூறியுள்ளது.

அடுத்த திருப்பம்

அடுத்த திருப்பம்

இந்த இரண்டு பிரச்சனைக்கும் காரணம், சீனாவின் உளவாளி ஒருவர் ரஷ்யாவில் பிடிப்பட்டதுதான் என்று கூறுகிறார்கள். ரஷ்யாவின் ஆர்டிக் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வந்த நபர் ஒருவர் சீனாவின் உளவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் ரஷ்யாவில் இருந்து முக்கியமான உளவு தகவல்களை சீனாவிற்கு அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரஷ்ய அரசு குறித்த ரகசியங்களை இவர் சீனாவிற்கு அனுப்பி உள்ளார்.

கோபம் அடைந்துள்ளது

கோபம் அடைந்துள்ளது

இது ரஷ்யாவை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. முக்கியமாக முன்னாள் உளவாளியான் புடினை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஒரு நட்பு நாட்டிற்குள் உளவாளியை அனுப்புவது ஏன் பெரிய விஷயம் என்று புடினுக்கு தெரியும். இந்த நிலையில் மொத்தமாக சீனாவுடன் உறவை முறிக்க அவர் தயாராக இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

என்ன விளக்கம்

என்ன விளக்கம்

இதற்கு சீனா கொடுத்த விளக்கம் நிலைமையை இன்னும் மோசமானதாக மாற்றியுள்ளது. அதன்படி எங்கள் பாதுகாப்பிற்காக உளவாளியை அனுப்பினோம். ரஷ்யாவிற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யவில்லை. எங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இப்படி செய்தோம் என்று சீனா கூறியுள்ளார். ரஷ்யாவை இந்த பதில் மேலும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

English summary
Russia and China fight is now visible after the espionage issue in Mosco.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X