For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஎஸ்ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டது பொய்யா? பகீர் கிளப்பும் ரஷ்யா.. டிரம்பிற்கு பரபரப்பு பதிலடி!

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட செய்திக்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐஎஸ்ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டது எப்படி? விளக்கிய டிரம்ப்!

    மாஸ்கோ: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட செய்திக்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.

    சிரியாவில் அமெரிக்க படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி பலியாகிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க படை தாக்க வந்த போது, அபு பக்கர் அல் பக்தாதி தன்னிடம் இருந்த குண்டை செயல்பட செய்து, தற்கொலை செய்துகொண்டார்.

    உலக நாடுகள் இடையே இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் அல் பக்தாதி கொல்லப்பட்டதாக வெளியாகும் செய்திகள் தொடர்பாக பலர் சந்தேகம் எழுப்பி இருக்கிறார்கள்.

    ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பக்தாதியை துரத்தி சென்ற அமெரிக்க மோப்ப நாய் மட்டுமே காயம்.. டொனால்ட் டிரம்ப்ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பக்தாதியை துரத்தி சென்ற அமெரிக்க மோப்ப நாய் மட்டுமே காயம்.. டொனால்ட் டிரம்ப்

    டிரம்ப் பேட்டி

    டிரம்ப் பேட்டி

    இந்த தாக்குதல் குறித்து டிரம்ப் அளித்த பேட்டியில் ரஷ்யாவிற்கு அவர் நன்றி தெரிவித்து இருந்தார். அதில், ரஷ்ய அரசு எங்களுக்கு உறுதுணையாக இருந்தது. அவர்கள் மிகவும் சிறப்பானவர்கள். எங்களை மிகவும் சிறப்பாக அவர்கள் கவனித்துக் கொண்டார்கள்.

    ரஷ்யா வான்பகுதி

    ரஷ்யா வான்பகுதி

    ரஷ்யாவின் வான் பகுதியை பயன்படுத்த அவர்கள் எங்களுக்கு அனுமதி அளித்தனர். அது வழியாகத்தான் அமெரிக்க விமானம் பறந்து சென்றது. ரஷ்யா மிகவும் சிறப்பான நாடு, என்று டிரம்ப் நேற்று ரஷ்ய புராணம் பாடியது பெரிய சர்ச்சையானது.

    மொத்தமாக மறுப்பு

    மொத்தமாக மறுப்பு

    இந்த நிலையில்தான் ரஷ்யா டிரம்பின் இந்த பேட்டியை மொத்தமாக மறுத்துள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், அமெரிக்கா எங்களிடம் இந்த தாக்குதல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. எங்களுக்கு ஒரு தகவலும் வரவில்லை.

    அனுமதி அளிக்கவில்லை

    அனுமதி அளிக்கவில்லை

    அதேபோல் அமெரிக்க போர் விமானம் எதுவும் நேற்று ரஷ்யாவிற்கு மேல் பறக்கவில்லை. நாங்களும் அமெரிக்க விமானம் எதற்கும் அனுமதி அளிக்கவில்லை. எங்களிடம் டிரம்ப் இது தொடர்பாக எதுவுமே பேசவில்லை என்று ரஷ்யா மொத்தமாக மறுத்துள்ளது.

    வைரல்

    வைரல்

    இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பக்தாதி கொல்லப்பட்டதாக கூறியது எல்லாம் பொய் என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. டிரம்ப் பொய் சொல்கிறார், அவர் விளம்பரம் வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார் என்று ரஷ்ய ஊடகங்கள் எழுதி இருக்கிறது.

    English summary
    Russia calls US president Trump operation against ISIS chief is just a propaganda.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X