For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக அழிவிற்கான குண்டு.. அதீத சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தை உருவாக்கிய ரஷ்யா.. எந்த இடத்தையும் தாக்கும்

ரஷ்யா மிக அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுத ஏவுகணையை உருவாக்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஷ்யாவில் வெடித்தது அமெரிக்காவின் போட்டியான அணு உலை?!

    மாஸ்கோ: ரஷ்யா மிக அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுத ஏவுகணையை உருவாக்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் இதன் சோதனை தோல்வி அடைந்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம் ரஷ்யாவில் நேனோக்சா ஏவுகணை சோதனை மையம் அருகே இருக்கும் வைட்-சி என்ற பகுதியில் உள்ள அணு மின்னணு நிலையம் அருகே பெரிய விபத்து ஏற்பட்டது. அந்த மையத்தில் இருந்து பெரிய அளவில் புகையும் நெருப்பும் வந்தது.

    இது எதனால் ஏற்பட்டது என்று முதலில் பெரிய குழப்பம் இருந்தது. இது தொடர்பாக நிறைய யுகங்கள், அனுமானங்கள் வெளியிடப்பட்டது.

    என்ன சோதனை

    என்ன சோதனை

    இதுகுறித்து பேட்டி அளித்த ரஷ்யாவின் அணு சக்தி மையம், அணு மின்னணு நிலையத்தில் செய்யப்பட சோதனை ஒன்று தவறாக முடிந்துள்ளது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. சிறிய அளவில் அருகில் உள்ள ஊர்களில் அணு கதிர் வீச்சு இருக்கும். மக்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் ரஷ்யாவில் வெடித்தது அணு ஆயுதம்தான், கண்டிப்பாக அணு உலை இல்லை. அவர்கள் அணு சக்தி மூலம் இயங்க கூடிய ஏவுகணையை சோதனை செய்துள்ளனர். அது வெடித்து கதிர் வீச்சு ஏற்பட்டுள்ளது. இதற்கான புகைப்பட ஆதாரங்கள் உள்ளது. அவர்களின் சோதனை தோல்வி அடைந்துள்ளது என்று அமெரிக்கா கூறியது.

    என்ன மாற்றியது

    என்ன மாற்றியது

    அதன்பின் பேச்சை மாற்றிய ரஷ்யா, நாங்கள் ஏவுகணை ஒன்றை சோதனை செய்யும் போது வெடித்துவிட்டது. ஆனால் அது அணு ஆயுதம் கிடையாது. இதனால் மக்களுக்கு அணுக்கதிர் பிரச்சனை கண்டிப்பாக இருக்காது என்றும் ரஷ்யா கூறியது.

    அமெரிக்கா என்ன

    அமெரிக்கா என்ன

    இந்த நிலையில் ரஷ்யா மிக அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுத ஏவுகணையை உருவாக்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் இதன் சோதனை தோல்வி அடைந்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆம் அணு சக்தி மூலம் இயங்க கூட இந்த ஏவுகணையின் பெயர் ஸ்கைஃபால் (skyfal) அல்லது உலக அழிவிற்கான ஆயுதம் (doomday weapon) என்று கூறுகிறார்கள்.

    உலகின் எந்த பகுதியையும்

    உலகின் எந்த பகுதியையும்

    இந்த ஏவுகணை உலகின் எந்த பகுதியை வேண்டுமானாலும் தாக்கும். வானத்தில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தாக்கும். இதன் திறனுக்கு முற்றுப்புள்ளியே கிடையாது. காற்று இருக்கும் இடம் வரை எங்கு வேண்டுமானாலும் இதனால் தாக்க முடியும் என்று கூறுகிறார்கள். இதற்கு எல்லையே கிடையாதாம்!

    என்ன தோல்வி

    என்ன தோல்வி

    இதை சோதனை செய்யும் போதுதான் தோல்வி அடைந்துள்ளது. ஆனால் இது முதல்முறை இல்லை. இதற்கு முன்பே ரஷ்யா இப்படி சோதனை செய்துள்ளது. இதற்கு முன்பே ரஷ்யா இப்படி பலமுறை சோதனையில் தோல்வி அடைந்து இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

    எப்படி முடியும்

    எப்படி முடியும்

    பொதுவாக ஏவுகணைகள் ஹைட்ரஜன் எரிபொருளை கொண்டு இயங்கும். ஆனால் இந்த ஏவுகணை அணு ஆயுதமாக மட்டுமில்லாமல், இது பறப்பதற்கு கூட அணு சக்தியை பயன்படுத்தும். அதாவது அணு ஆயுதம் ஒன்றை இவர்கள் அணு சக்தி மூலம் இயங்க கூடிய எஞ்சினை வைத்து ஏவுகிறார்கள்.

    எப்படி அணு சக்தி

    எப்படி அணு சக்தி

    இந்த என்ஜினுக்குள் தொடர்ந்து காற்று செல்லும்படி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இதில் உள்ள அணு சக்தி மூலம் காற்று ஆவியாக்கப்பட்டு அதன் மூலம் இது எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லும். அதனால் தான் இந்த ஏவுகணையால் உலகின் எந்த பகுதியை வேண்டுமானாலும் தாக்க முடியும் என்கிறார்கள்.

    எங்கு செய்து இருக்கிறார்கள்

    எங்கு செய்து இருக்கிறார்கள்

    இந்த அணு ஆயுதத்தை அவர்கள் தனியாக செய்யவில்லை. ஆம் மிகவும் ரகசியமாக அணு மின்னணு நிலையத்தில்வைத்து இந்த அணு ஆயுதத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதனால்தான் இது எப்படி உருவாக்கப்பட்டது என்று யாராலும் இன்னும் கண்டுபிடிக்கப்பட முடியவில்லை. இது தோல்வி அடைந்ததற்கு இப்படி ரகசியமாக அதை உருவாக்கி சரியாக சோதிக்காததுதான் காரணம் என்று கூறுகிறார்கள்.

    பிரச்சனை

    பிரச்சனை

    இந்த ஆயுதத்தால் நிறைய பிரச்சனைகள் நிகழும். உதாரணமாக இந்த ஏவுகணை அணு சக்தி மூலம் இயங்குவதால் இதை அணு ஆயுத தாக்குதலுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அடுத்தபடியாக இந்த ஏவுகணை ஏவப்பட்டுவிட்டாலே அது கதிர் வீச்சை வெளியிட்டுக் கொண்டே செல்லும். அதாவது ஒரு நாட்டை தாக்காமல் அந்த நாட்டை கடந்து சென்றாலே அங்கு சிறிய அளவு கதிர் வீச்சு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.

    மிக மோசம்

    மிக மோசம்

    ஆகவே இது போகும் வழியில் எல்லாம் கதிர் வீச்சு பாதிப்பு இருக்கும். அதனால்தான் இந்த ஏவுகணையை உலக அழிவிற்கான ஆயுதம் என்று கூறுகிறார்கள். இந்த ஏவுகணையை பயன்படுத்தினால் அது உலக அழிவின் தொடக்கமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

    ஆதாரம்

    ஆதாரம்

    அமெரிக்காவின் தரப்பில் இதற்கு நிறைய ஆதாரங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா அப்படி எந்த விதமான ஆதாரத்தையும் இன்னும் சமர்ப்பிக்கவில்லை. அதே சமயம் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை இன்னும் ரஷ்யா நிராகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    Russia created a doomsday weapon: Is the Skyfall Nuke for real? - All you need to know.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X