For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷ்ய அதிபர் தேர்தல்: அதிக வாக்கு வித்தியாசத்தில் புதின் வெற்றி

By BBC News தமிழ்
|

ஞாயிறன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றிப்பெற்றுள்ளார். அவரின் இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது; வெற்றியை தொடர்ந்து அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு மீண்டும் ரஷ்யாவின் அதிபராக செயல்படுவார் விளாடிமிர் புதின்.

ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் வெற்றி
Getty Images
ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் வெற்றி

ஏறத்தாழ அனைத்து வாக்குப் பெட்டிகளும் எண்ணப்பட்ட நிலையில் புதின் 76 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முக்கிய எதிர்கட்சி தலைவரான அலெக்செ நவல்னி தோல்வியை சந்தித்துள்ளார்.

தேர்தலின் முதல்கட்ட முடிவுகளை தொடர்ந்து மாஸ்கோவில் நடைபெற்ற பேரணியில் பேசிய புதின், கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற வெற்றிகளை வாக்காளர்கள் நினைவில் வைத்துள்ளனர் என தெரிவித்தார்.

அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சி செய்வது குறித்து என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் எனக்கு 100 வயது ஆகும் வரை நான் ஆட்சி செய்வேனா என்றா?! இல்லை. என சிரித்துக் கொண்டே அவர் பதிலளித்தார்.

BBC Tamil
English summary
Vladimir Putin will lead Russia for another six years, after securing an expected victory in Sunday's presidential election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X