For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷ்யாவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

By BBC News தமிழ்
|

ரஷ்யாவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது. மாஸ்கோவின் நேரத்தில் இருந்து ஒன்பது மணி நேரம் கால வித்தியாசத்தில் இருக்கும் தொலைதூர கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுகள் தொடங்கிவிட்டன.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
AFP
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் நான்காவது முறை அதிபராவதற்காக களத்தில் இருக்கிறார். புதினைத் தவிர வேறு ஏழு பேரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தேர்தலின் முதல்கட்ட முடிவு ஞாயிற்றுக்கிழமை மாலை வெளிவரும். 2000ஆம் ஆண்டு முதல் அதிபர் அல்லது பிரதமர் பதவியில் இருந்து வரும் புதின் ரஷ்யாவின் மேலாதிக்க தலைவராக இருந்து வருகிறார் புதின்.

அவரது போட்டியாளர்களில் ஒரு செல்வந்தரும் கம்யூனிஸ்ட்டுமான பவெல் க்ரூடினின், ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடந்தி வந்த பிரபலம் செனியா சோப்சக், மற்றும் மூத்த தேசியவாதியான விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கி உட்பட ஏழு பேர் விளாடிமிர் புதினுக்கு எதிராக களத்தில் உள்ளனர்.

அலெக்ஸி நவால்னி
Reuters
அலெக்ஸி நவால்னி

ரஷ்யாவில் மிக பிரபலமான எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவால்னி, மோசடி தொடர்பாக தண்டனை பெற்றதன் காரணமாக தேர்தலில் போட்டியிட முடியவில்லை. தன் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
Polls have opened in Russia's presidential election, in which incumbent Vladimir Putin is seeking a fourth term in office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X