For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள ரஷ்யாவிற்கு தடை

2018ல் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சுவிட்சர்லாந்து: 2018ல் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சுவிட்சர்லாந்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

சரியாக நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும். இது லீப் வருடங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து இரண்டு வருட இடைவெளியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சிறிய அளவில் நடக்கும்.

Russia has banned from participating in 2018 Winter Olympic

2018ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவின் 'பியோங்சாங்' என்ற இடத்தில் நடக்கிறது. தற்போது இந்த குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

ரஷ்யாவை சேர்ந்த சில வீரர்கள் ஒலிம்பிக் கமிட்டியின் சில விதிமுறைகளை மீறியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ரஷ்ய வீரர்களிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் இந்த விஷயம் கண்டுபிடிக்கப்ட்டது.

இதையடுத்து ரஷ்யா ஒலிம்பிக் கமிட்டி மீது அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டது. அதே சமயத்தில் ரஷ்யாவை சேர்ந்த தவறு செய்யாத வீரர்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவும் வகை செய்து கொடுத்துள்ளது.

ஆனால் அந்த வீரர்கள் ரஷ்ய குடிமகன் என்ற பெயரில் இல்லாமல், தனி நபராக போட்டிகளில் கலந்து கொள்ள முடியும் என்று ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது.

English summary
Russia has banned from participating in 2018 Winter Olympic. The International Olympic Committee has announced this information after few Russian players manipulated the Olympic game’s anti-doping system.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X