For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஷ்யாவில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு.. ஸ்பெயினை முந்தும் வேகம்

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அந்த நாடு தற்போது இரண்டாவது நிலையில் இருக்கும் ஸ்பெயினை பின்னுக்கு தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    கொரோனா வைரஸ் அச்சத்தையும் தாண்டி விண்வெளி சென்ற இருநாட்டு வீரர்கள்

    உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 லட்சத்தை தாண்டியது. அதாவது 41,00,609 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 2,80,431 ஆக உள்ளது. கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 14,39,842 ஆக உள்ளது.

    மருத்துவமனையில் 23 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    இந்த எண்ணிக்கையில் 47 ஆயிரம் பேரின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    தீவிரம்.. மகாராஷ்டிராவில் 20 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு.. நாடு முழுக்க 62 ஆயிரம் பேருக்கு கொரோனா! தீவிரம்.. மகாராஷ்டிராவில் 20 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு.. நாடு முழுக்க 62 ஆயிரம் பேருக்கு கொரோனா!

    இத்தாலி

    இத்தாலி

    அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 13 லட்சத்தை தாண்டியது. அதாவது 13,47,309 ஆக உள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியது. ஸ்பெயினில் 2,62,783 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 26,478 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். இத்தாலியில் கொரோனாவால் 2,18,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 30, 395 ஆக உள்ளது.

    பிரான்ஸ்

    பிரான்ஸ்

    பிரிட்டனில் 2,18,268 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 31,587 ஆக உள்ளது. அது போல் பிரான்ஸில் 176,658 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 26,310 ஆக உள்ளது. ஜெர்மனியில் 1,71,324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,549 பேர் பலியாகிவிட்டனர்.

    சிங்கப்பூர்

    சிங்கப்பூர்

    பிரேசிலில் கொரோனாவால் 1,56,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 10,656 பேர் பலியாகிவிட்டனர். பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,736 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 636 ஆக உள்ளது. அது போல் சிங்கப்பூரில் 22,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இதுவரை 20 பேர் பலியாகிவிட்டனர்.

    உபகரணங்கள்

    உபகரணங்கள்

    ரஷ்யாவில் 1,89,676 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு கொரோனாவால் 1,827 பேர் பலியாகிவிட்டனர். இங்கு 31 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். இங்கு கொரோனா பாதிப்பு வேகமாக உள்ளது. பிரேசிலில் மருத்துவ உபகரணங்கள் இல்லை என கூறப்பட்டது. ஆனால் ரஷ்யாவோ அமெரிக்காவுக்கு மருத்துவ உபகரணங்களை கொடுத்து உதவியது.

    கவலை

    கவலை

    இந்த நிலையில் ரஷ்யாவை காட்டிலும் பிரேசிலில் பாதிப்பு குறைவாகவே உள்ளது. ரஷ்யாவின் வேகத்தை பார்த்தால் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்திற்கு விரைவில் வந்துவிடும் என தெரிகிறது. இது அந்நாட்டு மக்களை கவலையடையச் செய்துள்ளது.

    English summary
    Russia is becoming epicentre of the pandemic as the cases increases day by day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X