For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதிரிகளை கண்காணிக்க வசதி.. அச்சு அசலாக கரப்பான் பூச்சி போன்று ரோபோ உருவாக்கிய ரஷ்யா

By Veera Kumar
Google Oneindia Tamil News

மாஸ்கோ: கரப்பான் பூச்சியை போலவே உருவம் கொண்ட குட்டி ரோபோ எந்திரத்தை ரஷ்யா உருவாக்கியுள்ளது. அதில் காமிரா பொருத்தப்பட்டிருக்கும் என்பதால் ராணுவத்தினர், எதிரிகள் நடவடிக்கையை இந்த ரோபோவை வைத்து கண்காணிக்க முடியும்.

இப்படி ஒரு குட்டி ரோபோ உருவாக்கப்பட்டுள்ளதை ரஷ்ய நாட்டு அரசு ஊடகமும் உறுதி செய்துள்ளது. 7 மாத உழைப்பில் இம்மானுவேல், கன்ட் பால்டிக் பெடரல் பல்கலைக்கழகம் இதை உருவாக்கியுள்ளது.

சுமார் 6 செ.மீ. நீளம் கொண்ட இந்த கரப்பான் பூச்சி ரோபோ பேட்டரியால் இயங்கும். 20 நிமிட நேரம் தொடர்ச்சியாக பேட்டரியால் இயக்க முடியும். இதில் சிறு காமிராவும் பொருத்தப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்கள், இந்த ரோபோவை அனுப்பி எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும். பார்க்க கரப்பான் பூச்சியை போலவே இருப்பதால், யாருக்கும் சந்தேகம் வர வாய்ப்பில்லை. மல்லாக்க போட்டாலும், நிஜ கரப்பான் பூச்சியை போலவே கால்களை ஆட்டியபடி உள்ளது இந்த ரோபோ.

English summary
According to Russian state-owned Sputnik news site, the robotic cockroach was built in seven months by a group at the Immanuel Kant Baltic Federal University.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X