For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணு ஆயுதங்களை பயன்படுத்துங்கள்.. புடின் கொண்டு வந்த புது விதி.. ரஷ்யாவின் முடிவால் புதிய பரபரப்பு!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: அணு ஆயுதங்களை போரின் போது பயன்படுத்துவது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் புதிய விதிமுறைகளை வெளியிட்டு இருக்கிறார். அவரின் இந்த புதிய அறிவிப்பும், ரஷ்யாவின் திட்டமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்கோ ஒரு இடத்தில் பட்டாம் பூச்சி சிறகை அசைத்தால் பூமியில் வேறு எங்கோ ஒரு இடத்தில் புயல் தோன்றும் என்று கூறுவார்கள். இந்த செயலுக்கு பட்டாம்பூச்சி விளைவு (butterfly effect) என்று பெயர். தற்போது உலக அரசியலில் இப்படி ஒரு butterfly effectதான் ஏற்பட்டு இருக்கிறது.

சீனாவை தொடர்ந்து அமெரிக்கா நெருக்கி வரும் நிலையில் தற்போது ரஷ்யா அமெரிக்காவை நெருக்க தொடங்கி உள்ளது. சீனாவில் அசைந்த பாட்டாம்பூச்சி ரஷ்யாவில் ஒரு முக்கியமான புயலை ஏற்படுத்தி உள்ளது.

பனிப்போர் தொடங்கியது.. சீன விமானங்களுக்கு தடை விதித்த டிரம்ப்.. கடும் கோபத்தில் ஜிங்பிங்.. பின்னணி! பனிப்போர் தொடங்கியது.. சீன விமானங்களுக்கு தடை விதித்த டிரம்ப்.. கடும் கோபத்தில் ஜிங்பிங்.. பின்னணி!

என்ன நடந்தது

என்ன நடந்தது

அப்படி ரஷ்யாவில் என்ன நடந்தது என்று நீங்கள் கேட்கலாம்.. ரஷ்யாவின் அணு ஆயுத கொள்கையில் முக்கியமான திருத்தத்தை அந்நாட்டு அதிபர் புடின் செய்து இருக்கிறார். ரஷ்யாவின் அணு ஆயுத கொள்கைபடி ரஷ்யா மீது யாராவது அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் மட்டுமே திருப்பி அணு ஆயுதங்களை ஏவ முடியும். அதோடு எதிரி நாடு அணு ஆயுததை ஏவிய பின் மட்டுமே பதில் தாக்குதல் நடத்த முடியும்.

பெரிய மாற்றம்

பெரிய மாற்றம்

அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை முடிந்த அளவு தடுக்கும் வகையில் ரஷ்யா இந்த நடைமுறையை வைத்து இருந்தது. இந்த நிலையில் புதிய திருப்பமாக அணு ஆயுத கொள்கையில் ரஷ்யா புதிய மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி இனிமேல் ரஷ்யாவில் அணு ஆயுத தாக்குதல் நடத்தவில்லை என்றாலும் கூட ரஷ்யா அணு ஆயுதங்களை பதிலுக்கு ஏவ முடியும். அதாவது சாதாரண ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யா அணு ஆயுதங்களை ஏவ முடியும்.

அணு ஆயுதம்

அணு ஆயுதம்

உதாரணமாக ரஷ்யா மீது உக்ரைன் சிறிய ஏவுகணை ஒன்றை ஏவினால் ரஷ்யா பதிலுக்கு அணு ஆயுதத்தை ஏவும் வகையில் விதிகளை மாற்றி உள்ளனர். அதோடு எதிரி நாடு ஏவுகணை தாக்குதல் நடத்த உள்ளது என்று உறுதியான உளவு தகவல் கிடைத்தால் கூட ரஷ்யா தனது அணு ஆயுதங்களை ஏவ முடியும். இனிமேல் எதிரி நாடு தாக்கும் வரை ரஷ்யா காத்து இருக்காது.

அமெரிக்கா எப்படி

அமெரிக்கா எப்படி

ரஷ்யாவின் இந்த முடிவிற்கு காரணம் யார் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். வேறு யாரும் இல்லை அமெரிக்காதான். உக்ரைன் மற்றும் சீனா பிரச்சனை காரணமாக ரஷ்யா எல்லையில் அமெரிக்கா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. அங்கு தொடர்ந்து நேட்டோ படைகளை வைத்து அமெரிக்கா பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் ஏவுகணைகள் அங்கு உள்ளது.

Recommended Video

    மெளனம் கலைத்த ரஷ்யா... India - China மோதல் குறித்து கருத்து
    சக்தி வாய்ந்த ஏவுகணைகள்

    சக்தி வாய்ந்த ஏவுகணைகள்

    இந்த ஏவுகணைகள் மிகவும் சக்தி வாய்ந்தது. புதிய பலம் கொண்டது. இதன் மூலம் அணு ஆயுதங்களை ஏவாமலே அமெரிக்கா ரஷ்யாவை அழிக்க முடியும். அணு ஆயுதம் இல்லாமலே ரஷ்யாவை அமெரிக்கா பெரிதாக தாக்க முடியும். இதனால்தான் அணு ஆயுதங்களுக்கு எதிராக மட்டும் அணு ஆயுத தாக்குதலை நடத்தாமல், அனைத்து விதமான தாக்குதலுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது. உலக நாடுகளுக்கு இடையே இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

    English summary
    Russia's President Putin nods for new nuke attack rules amid growing World War Tension.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X