For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவை தனிமைப்படுத்தும் அமெரிக்கா.. எதிர்க்கும் ரஷ்யா.. ஜி7 மாநாட்டில் பங்கேற்குமா?

Google Oneindia Tamil News

மாஸ்கோ: சீனாவை தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிக்கு ரஷ்யா ஆட்சேபனை தெரிவித்துள்ளது. ஜி7 மாநாட்டில் இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை டிரம்ப் அழைத்துள்ளது குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவித்தது ரஷ்யா.

கொரோனா பாதிப்பு சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு பரவியதை அடுத்து அமெரிக்கா சீனாவை கடுமையாக விமர்சித்து வந்தது. சீனாவின் வைரஸ் என்ற பெரும்பாலான பேட்டிகளில் டொனால்ட் டிரம்ப் விமர்சித்திருந்தார்.

அது போல் அமெரிக்காவில் படித்து வந்த சீன மாணவர்கள், பத்திரிகையாளர்களையும் வெளியேற்றினார். மேலும் இந்த வைரஸ் சீனாவின் வுகான் பரிசோதனை கூடத்திலிருந்து வெளியேறியது என அமெரிக்க நாட்டு தொலைகாட்சி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் டிரம்ப் குற்றம்சாட்டினார்.

வளம் தரும் வைகாசி புதன்கிழமை பிரதோஷம் - இந்த ராசிக்காரங்க விரதம் இருக்கணும்வளம் தரும் வைகாசி புதன்கிழமை பிரதோஷம் - இந்த ராசிக்காரங்க விரதம் இருக்கணும்

சீனா பரப்பியது

சீனா பரப்பியது

கொரோனா வைரஸ் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். ஒரு வேளை அந்த வைரஸை வேண்டுமென்றே சீனா பரப்பியது தெரியவந்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

அமெரிக்க நிறுவனங்கள்

அமெரிக்க நிறுவனங்கள்

இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. கடல் எல்லையில் அத்துமீறி நுழைவது போன்ற நடவடிக்கைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டன. கொரோனா பாதிப்பை பயன்படுத்தி பொருளாதார சிக்கலில் உள்ள மற்ற நிறுவனங்களை சீனா வாங்கி குவித்தது தெரியவந்தது. இந்த நிலையில் சீனாவுக்கு பொருளாதார ரீதியில் பலத்த அடி கொடுக்கும் விதமாக சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற வேண்டும்.

வர்த்தகம்

வர்த்தகம்

சீனாவுடனான வர்த்தகத்தை துண்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
சீனாவை உலக நாடுகள் ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளது. இந்த நிலையில் வரும் செப்டம்பரில் நடைபெறும் ஜி7 மாநாட்டை தலைமையேற்று நடத்தும் டிரம்ப் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா, ரஷ்யா, தென்கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை அழைக்கவுள்ளார்.

சர்வதேச முயற்சி

சர்வதேச முயற்சி

இதுகுறித்து ரஷ்யாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரிய ஜகரோவா கூறுகையில் ஜி7 அமைப்பை விரிவுபடுத்துவது நல்ல விஷயம்தான். ஆனால் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சீனாவை ஒதுக்கி வைத்து விட்டு எந்த சர்வதேச முயற்சிகளையும் மேற்கொள்வது சரியல்ல.

Recommended Video

    டிரம்ப் உருவாக்கும் 10 நாடுகளின் கூட்டணி... சீனாவை அடக்க திட்டம்
    ரஷ்யா

    ரஷ்யா

    தற்போது ஜி7 நாடுகள், பிரிக்ஸ் நாடுகள், உலகின் பொருளாதார சக்திகளை உள்ளடக்கிய ஜி 20 என்ற வலுவான அமைப்பு உள்ளதை சுட்டிக் காட்ட விரும்புகிறது ரஷ்யா என தெரிவித்துள்ளார். ரஷ்யா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ள நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அழைத்தது போல் ரஷ்ய அதிபர் புதினை டிரம்ப் தொடர்பு கொண்டு ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தால் அதில் ரஷ்யா பங்கேற்குமா என்பது சந்தேகமே.

    English summary
    Russia objects over isolating China and says that its not possible to implement serious global initiatives.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X