For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆபத்து.. ரஷ்ய நதியில் கலந்த 20,000 டன் எண்ணெய்.. உலக நாடுகளுக்கு புடின் தந்த வார்னிங்.. என்ன ஆனது?

ரஷ்யாவில் ஆர்டிக் கடல் பகுதியில் எண்ணெய் கலந்தது பெரிய அதிர்ச்சி அளிக்கிறது, இது உலகிற்கே ஆபத்தாக முடியும் என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவில் ஆர்டிக் கடல் பகுதியில் எண்ணெய் கலந்தது பெரிய அதிர்ச்சி அளிக்கிறது, இது உலகிற்கே ஆபத்தாக முடியும் என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுக்க கொரோனா ஒரு பக்கம் பரவி வர இன்னொரு பக்கம் புயல், வெள்ளம், நிலநடுக்கம் என்று நிறைய சேதங்கள், இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. உலகமே அழிவின் அச்சத்தில் இருக்கும் வகையில் தொடர் பேரிடர்கள் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த நிலையில்தான் ரஷ்யாவில் இருக்கும் ஆர்டிக் கடல் பகுதியில் பெரிய அளவில் எண்ணெய் கலந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் என்றால் மொத்தம் 20 ஆயிரம் டன் எண்ணெய் அங்கு நதியில் கலந்து பின் கடலில் கலந்து இருக்கிறது.

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. 9 நாளில் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வுசென்னையில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. 9 நாளில் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வு

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

முதலில் ரஷ்யாவின் இந்த எண்ணெய் விபத்து குறித்து தெரிந்து கொள்ளும் முன் பெர்மாஃப்ரோஸ்ட் (permafrost) குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். பெர்மாஃப்ரோஸ்ட் (permafrost) என்பது பூமியில் பல இடங்களில் இருக்கும் ஒரு நிலப்பரப்பு வகை ஆகும். ஆனால் இது சாதாரண நிலம் கிடையாது. இதன் அடிப்பகுதியில் ஐஸ் கட்டிகள் இருக்கும். இதன் அடிப்பகுதி மொத்தமாக உறைந்து, நிரந்தரமாக உருகாமல் இருக்கும் ஐஸ் கட்டி பகுதியாக மாறி இருக்கும்.

பல வருடம் பகுதிகள்

பல வருடம் பகுதிகள்

அதாவது பெர்மாஃப்ரோஸ்ட் (permafrost) பகுதிகள் பல லட்சம் வருடங்களுக்கு முன் உருவானது. இந்த பகுதிகள் அடியில் ஐஸ் கட்டி இருந்தாலும் அது கட்டிடம் கட்டும் அளவிற்கு மிகவும் வலுவாக இருக்கும்.பாறை போல இறுக்கமாக இருக்கும். மொத்தம் இந்த பூமியில் 22% நிலப்பரப்பு பெர்மாஃப்ரோஸ்ட் (permafrost) நிலப்பரப்புதான்.

உறைந்து காணப்படும்

உறைந்து காணப்படும்

ரஷ்யா உள்ளிட்ட ஆர்டிக் கடல் இருக்கும் பகுதிகளில் பெர்மாஃப்ரோஸ்ட் (permafrost) இருக்கும். மொத்தமாக உறைந்து காணப்படும் இந்த பகுதியில் நிறைய கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கிறது. ரஷ்யாவில் இந்த பெர்மாஃப்ரோஸ்ட் (permafrost) மீது நிறைய தொழிற்சாலைகள் கூட கட்டப்பட்டு உள்ளது. இதுதான் தற்போது ஆபத்தாக மாற தொடங்கி உள்ளது.

எப்படி ஆபத்து

எப்படி ஆபத்து

இந்த பெர்மாஃப்ரோஸ்ட் (permafrost) என்பது கொஞ்சம் கொஞ்சமாக தற்போது உருக தொடங்கி உள்ளது. பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவதால் இந்த பெர்மாஃப்ரோஸ்ட் (permafrost) பகுதிகள் வலிமை இழந்து உருக தொடங்கி உள்ளது. கடந்த 20 வருடங்களில் இதன் வெப்பநிலை 3.5 டிகிரி செல்ஸியஸ் அதிகரித்துள்ளது. உலகம் முழுக்க இதனால் 39 லட்சம் சதுர கிலோ மீட்டர் பகுதிகள் உருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில் என்ன நடந்தது

ரஷ்யாவில் என்ன நடந்தது

ரஷ்யாவிலும் இதேபோல் பெர்மாஃப்ரோஸ்ட் (permafrost)தான் உருகி இருக்கிறது. அங்கு பெர்மாஃப்ரோஸ்ட் (permafrost) நிலப்பரப்பை கொண்ட நோரிலாஸ்க் பகுதியில் இருக்கும் நோரிலாஸ்க் அணுமின் நிலையத்தில்தான் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மின் நிலையம் பெர்மாஃப்ரோஸ்ட் (permafrost) நிலப்பரப்பில் கட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வானிலை மாற்றம் காரணமாக அங்கிருக்கும் பெர்மாஃப்ரோஸ்ட் (permafrost) உருகி உள்ளது .

 டேங்க் உடைந்தது

டேங்க் உடைந்தது

இந்த பெர்மாஃப்ரோஸ்ட் (permafrost) உருகிய காரணத்தால் அதன் மேல் பில்லர் வைத்து எழுப்பப்பட்டு இருந்த அந்த அணுமின் நிலையத்தில் சேதங்கள் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பில்லர் உடைந்து எண்ணெய் நிரப்பி இருந்த பெரிய டேங்குகள் வெடித்து சிதறியது. இதன் காரணமாகவே அங்கிருந்து எண்ணெய் மொத்தமாக வெளியேறி அம்பர்நயா நதியில் கலந்தது. இந்த நதி ஆர்டிக் கடலில் கலந்து உள்ளதால், அங்கும் தற்போது எண்ணெய் சென்றுள்ளது .

மோசம்

மோசம்

இந்த எண்ணெயை எடுக்க எந்த வகையிலும் வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டார்கள். கடலில் கலந்து இருக்கும் இந்த எண்ணெய் மிகப்பெரிய சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். இதனால் ரஷ்யாவில் கடந்த இரண்டு வாரமாக அவசர நிலை போடப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அங்கு எண்ணெயை சுத்தம் செய்ய முடியவில்லை. இதனால் ஆர்டிக் கடல் எல்லையில் இருக்கும் தேசங்கள் எல்லாம் பாதிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.

பெரிய அதிர்ச்சி

பெரிய அதிர்ச்சி

இதனால் உலகின் வெப்பநிலை மேலும் உயரும். கடல் வாழ் உயிரினங்கள் பெரிய அளவில் மரணிக்கும். உலகின் வானிலையில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். சரி செய்ய முடியாத தவறு இது. இயற்கை தானாகவே இதை சரி செய்தால் மட்டுமே ஆர்டிக் கடல் இனி தப்பிக்கும் என்று இயற்கை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய எச்சரிக்கை

இது தொடர்பாக தற்போது ரஷ்யா உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால் இதில் எங்கள் தவறு இல்லை. இது உலக நாடுகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் . உலகம் முழுக்க பெர்மாஃப்ரோஸ்ட் (permafrost) பகுதியில் கட்டிடம், தொழில்சாலை கட்டி இருக்கும் நாடுகள் அதை உடனே கவனிக்க வேண்டும். நமக்கு பெரிய ஆபத்து காத்து இருக்கிறது என்று கூறி உள்ளது.

English summary
Russia Oil Spill in the Arctic will be warning for world nations environment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X