For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லடாக் பக்கம் திரும்பிய புடின் பார்வை.. இந்திய-சீன சண்டை பற்றி ரஷ்யா திடீர் கருத்து.. யாருக்கு ஆதரவு?

Google Oneindia Tamil News

மாஸ்கோ: இந்தியா - சீனா பிரச்சனை குறித்து இத்தனை நாட்கள் பேசாமல் இருந்த ரஷ்யா முதல்முறையாக மௌனம் கலைத்து இருக்கிறது.

Recommended Video

    மெளனம் கலைத்த ரஷ்யா... India - China மோதல் குறித்து கருத்து

    இந்தியா - சீன எல்லை பிரச்சனை உலகம் முழுக்க கவனம் ஈர்த்து இருக்கிறது. இந்த எல்லை பிரச்சனையை அமெரிக்கா தீவிரமாக கவனித்து வருகிறது. லடாக் எல்லையில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது.

    இரண்டு நாட்டு படைகளும் நவீன ஆயுதங்களை தங்கள் எல்லையில் குவித்து வருகிறது. முக்கியமாக சீனா லடாக் எல்லைக்கு அருகே போர் விமானங்கள் மூலம் ரோந்து பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.

    இந்திய எல்லை அருகே ஏராளமான படைகளை சீனா குவித்துள்ளது: ராஜ்நாத் சிங்

    ரஷ்யா நிலை

    ரஷ்யா நிலை

    இந்த சண்டையில் மத்தியசம் பேச தயாராக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் அதிபர் டிரம்பின் இந்த கோரிக்கையை இந்தியா - சீனா ஆகிய இரண்டு நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் இன்னொரு முக்கிய நாடான ரஷ்யா இதில் தொடர்ந்து மௌனம் காத்து வந்தது. சீனாவிற்கு நெருங்கிய நண்பனான ரஷ்யா, இந்தியாவுடனும் நல்ல நட்பை பேணி வருகிறது. இதனால் ரஷ்யாவின் கருத்து அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

    சீனாவுடன் உறவு

    சீனாவுடன் உறவு

    சீனாவுடன் ரஷ்யா தொடர்ந்து நல்ல உறவை பேணி வருகிறது. இரண்டு நாட்டு கம்யூனிச அரசும் மிகவும் நெருக்கமாக நட்பை கடைப்பிடித்து வருகிறது. முக்கியமாக ராணுவ ரீதியாக ஒப்பந்தங்களை இரண்டு நாடுகளும் செய்து இருக்கிறது. அமெரிக்காவை சமாளிக்கும் வகையில் ரஷ்யா சீனாவிற்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறது. இவர்களின் உறவும் இப்போதும் வலுவாக இருக்கிறது.

    இந்தியா ரஷ்யா உறவு

    இந்தியா ரஷ்யா உறவு

    ஒரு பக்கம் சீனாவுடன் ரஷ்யா நெருக்கமாக இருந்தாலும் இந்தியாவிற்கும் ரஷ்யா நட்பு நாடுதான். இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்கும் சமயத்திலும் கூட ரஷ்யாவுடன் எப்போதும் போல நட்பை பேணி வருகிறது. இந்தியா இப்போது ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு உபகாரணங்கள், ஆயுதங்கள், விண்வெளி ஆராய்ச்சி உபகரணங்களை வாங்கி வருகிறது.

    கருத்து தெரிவித்துள்ளது

    கருத்து தெரிவித்துள்ளது

    இந்த நிலையில் சீனா - இந்தியா பிரச்சனை தொடர்பாக ரஷ்யா தற்போது கருத்து தெரிவித்துள்ளது. முதல் முறையாக லடாக் பக்கம் புடின் பார்வை திரும்பி உள்ளது. அதில், இந்திய, சீனா சண்டை எங்களுக்கு கவலை அளிக்கிறது. இரண்டு நாடுகளும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் குறிக்கோள். இரண்டு நாடுகளும் ஆசியாவில் முக்கியமான நாடுகள். இவர்கள் சண்டை ஆசியாவின் அமைதியை பாதிக்கும்.

    கவலை அளிக்கிறது

    கவலை அளிக்கிறது

    இந்த எல்லை பிரச்சனை எங்களுக்கு கவலை அளிப்பதோடு அச்சம் அளிக்கிறது. எங்களுக்கு தெரிந்த வரை இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழ்நிலைகள் இருக்கிறது. ஏற்கனவே இதற்கான ஒப்பந்தங்களை இரண்டு நாடுகளும் செய்து இருக்கிறது. பேச்சுவார்த்தைக்கான கூட்டங்களை உடனே இரண்டு நாடுகளும் நடத்த வேண்டும். நாங்கள் இந்த பேச்சுவார்த்தையை ஊக்குவிப்போம்.

    நடுநிலை முடிவு

    நடுநிலை முடிவு

    இரண்டு நாடுகளுக்கும் திருப்தி அளிக்கும் வகையிலான ஒப்பந்தத்தை செய்ய வேண்டும் என்பதுதான் எண்களின் நோக்கம். அதற்கான முன்னெடுப்பை செய்ய வேண்டும் என்று ரஷ்யா கூறியுள்ளது. இந்தியா சீனா பிரச்சனையில் ரஷ்யா யார் பக்கமும் நிற்காமல் அமைதி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. இரண்டு நாடுமே நட்பு நாடுகள் என்பதால் ரஷ்யா இப்படி, நடுநிலையுடன் செயல்பட தொடங்கி உள்ளது.

    English summary
    Russia opens its mouth for the first time in India - China standoff in Ladakh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X