For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிரியா அரசுக்கு ஆதரவாக சென்ற ரஷ்ய விமானம் விபத்து.. 32 பேர் பலி

சிரியாவில் போரில் அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக சென்ற ரஷ்ய விமானம் விபத்து உள்ளாகி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சிரியா போரில் காலம் இறங்கிய வட கொரியா- வீடியோ

    டமாஸ்கஸ்: சிரியாவில் போரில் அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக சென்ற ரஷ்ய விமானம் விபத்து உள்ளாகி இருக்கிறது. இதில் 32 பேர் பலியாகியுள்ளனர்.

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

    Russia plane crashes in Syria, 32 people died

    இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 15 நாட்களில் மட்டும் இதுவரை 1300 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

    இந்த போரில் தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஆனாலும் ரஷ்யா அவ்வப்போது வான்வெளி தாக்குதல் நடத்துகிறது.

    இந்த நிலையில் சிரியா அரசுக்கு ஆதரவாக சென்ற ரஷ்ய விமானம் விபத்து உள்ளாகி இருக்கிறது. சிரியாவின் லடாகியாவில் உள்ள ரஷ்ய விமான தளத்திற்கு சென்றபோது விபத்துக்குள்ளானது.

    சிரியாவில் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியதில் 32 பேர் பலியாகியுள்ளனர். இதில் 6 பேர் விமான பணியாளர்கள்.

    English summary
    Russia plane crashed while approaching to land at airport in Syria. 26 passengers, 6 crew member died in this accident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X