For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொத்தமாக இணைய உலகிலிருந்து வெளியேறும் ரஷ்யா.. சொந்தமாக இன்டர்நெட் உருவாக்க முடிவு!

Google Oneindia Tamil News

Recommended Video

    சொந்தமாக இன்டர்நெட் உருவாக்க ரஷ்யா முடிவு!

    மஸ்கோ: ரஷ்யா தங்களுக்கு என்று சொந்தமாக இணையத்தை உருவாக்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் இணைய உலகில் இருந்து மொத்தமாக வெளியேற அந்நாடு முடிவெடுத்துள்ளது.

    அமெரிக்காவிற்கு தற்போதும் ரஷ்யாதான் அச்சுறுத்த கூடிய நாடாக திகழ்ந்து வருகிறது. ஆனால் முன்பு போல ரஷ்யா ஆயுதங்கள் மூலம் அமெரிக்காவை அச்சுறுத்தவில்லை. இந்த முறை இணையம் மூலம் ரஷ்யா அமெரிக்காவை பயமுறுத்தி வருகிறது.

    Russia plans to quit the internet and plans to create a web on their own

    அமெரிக்காவில் நடக்கும் பெரும்பாலான ஹேக்கிங் தாக்குதல்கள் எல்லாம் ரஷ்யா மூலம் நடப்பதாக ஒரு குற்றச்சாட்டு ஏற்கனவே இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே ரஷ்யா இணையம் மூலம் நிறைய கட்டுரைகளை முறைகேடாக வெளியிட்டு, தேர்தல் முடிவை மாற்றியது என்று குற்றச்சாட்டு உள்ளது.

    கமல்ஹாசனுக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லைன்னாலும் பிறப்பால் அவர் ஒரு இந்து- பிரேமலதா கமல்ஹாசனுக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லைன்னாலும் பிறப்பால் அவர் ஒரு இந்து- பிரேமலதா

    ஆனால் ரஷ்யா இதில் கொஞ்சம் உஷார். ரஷ்யாவில் இணைய பயன்பாட்டிற்கு நிறைய கட்டுப்பாடு இருக்கிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால், ரஷ்யாவில் சீனாவை போலவே நிறைய இணைய கட்டுப்பாடுகள், பாதுகாப்பு விதிகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்தான் ரஷ்யா தங்களுக்கு என்று சொந்தமாக இணையத்தை உருவாக்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளது. ஆம் தற்போது இருக்கும் இணைய உலகில் இருந்து ரஷ்யா தங்களை மொத்தமாக துண்டித்துக் கொள்ள முடிவெடுத்து உள்ளது.

    அதன்படி புதிதாக தங்களுக்கு என்று ஒரு வெப் உலகை உருவாக்க ரஷ்யா முடிவெடுத்து உள்ளது. அதற்கும் தற்போது பயன்பாட்டில் இருக்கும் இணையத்திற்கும் எந்த தொடர்பும் இருக்காது என்று கூறுகிறார்கள். மாறாக அந்த இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் அப்படியே இதில் கிடைக்கும்.

    இந்த இணையத்தை உலகில் வேறு எங்கும் பயன்படுத்த முடியாது. ரஷ்யாவில் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். இதன் மூலம் உலகில் இது மிகவும் பாதுகாப்பான இணைய உலகாக இருக்கும் என்று ரஷ்யா நம்புகிறது. இதற்காக தன்னாட்டின் ஆராய்ச்சியாளர்களை ரஷ்யா அதிபர் புடின் முடுக்கிவிட்டு இருக்கிறார்.

    விரைவில் ரஷ்யா இதுகுறித்த அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில், இணைய உலகில் ரஷ்யா தனித்து விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Russia plans to quit the internet and plans to create a web on their own - reports.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X