For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புடின்.. முக்கிய 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக இந்தியா வந்துள்ளார்.

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக இந்தியா வர உள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வர இருக்கிறார். இன்று மாலை டெல்லிக்கு அவர் வர உள்ளார்.

அவருக்காக டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவரின் இந்திய வருகையை உலகமே உற்றுநோக்குகிறது.

மோடி சந்திப்பு

மோடி சந்திப்பு

அவர் நாளைதான் பிரதமர் மோடியை சந்திப்பார். பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடக்கும். இவர்களுடன் இரண்டு நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர்களும் உடன் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

[இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும்.. அமெரிக்காவின் மிரட்டலால் பரபரப்பு.. என்ன நடந்தது? ]

20 ஒப்பந்தம்

20 ஒப்பந்தம்

இதில் மொத்தம் 20 ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பாதுகாப்பு துறைக்கு முக்கியத்துவம் கொடுத்தே இந்த பயணம் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் விண்வெளி துறை, அணு சக்தி, பொருளாதாரம், வர்த்தகம் ஆகிய துறைகளிலும் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.

எஸ்400 ஒப்பந்தம்

எஸ்400 ஒப்பந்தம்

இந்த நிலையில் ரஷ்யாவிடம் இந்தியா, எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க உள்ளது. இது மிகவும் வலிமை வாய்ந்த திறன் வாய்ந்த ஏவுகணை ஆகும். இதற்கான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக உள்ளது. இதை மையப்படுத்தியே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வர உள்ளார். இந்த ஒப்பந்தம் 36 ஆயிரம் கோடி ரூபாயில் போடப்பட உள்ளது.

அமெரிக்கா கோபம்

அமெரிக்கா கோபம்

இந்த பயணம் காரணமாக அமெரிக்கா இந்தியா மீது கோபத்தில் உள்ளது. முக்கியமாக ஏவுகணை ஒப்பந்தம் அமெரிக்காவை கோபப்படுத்தி இருக்கிறது. இதனால்தான் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

English summary
Russia President Vladimir Putin will come to India today. He will meet Prime Minister Modi tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X