For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி.. புயலை கிளப்பிய ஜெர்மனி.. மக்களின் உயிர்தான் முக்கியம்!

Google Oneindia Tamil News

பெர்லின்: ஜெர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான், ரஷ்யாவின் கொரோனா (COVID-19) தடுப்பூசி போதுமான அளவு பரிசோதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். ஒரு தடுப்பூசியை மக்களுக்கு போடுவதற்கு முன்னர் அதன் பாதுகாப்பை உறுதி செய்வது தான் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் தடுப்பூசியை சந்தேகத்தில் பார்க்கின்றன.

Recommended Video

    Russia Corona Vaccine| Why India may have to wait longer? | Sputnik V Vaccine | Oneindia Tamil

    கொரோனா (COVID-19) தடுப்பூசிக்கு இரண்டு மாதங்கள் கூட சரிவர மனித பரிசோதனைகள் நடத்தப்படாமல் உள்ளது. ஆனாலும் கொரோனா தடுப்பூசிக்கு, ஒழுங்குமுறை ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாக ரஷ்யா பதிவு செய்துள்ளது, அதிபர் விளாடிமிர் புடின் இந்த தகவலை செவ்வாய்க்கிழமை அறிவித்தார். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த ரஷ்ய அதிபர் புடின் தனது மகளுக்கு தடுப்பூசியை போட்டுள்ளார்.

    இதனிடையே இறுதி சோதனைகள் நிறைவடைவதற்கு முன்னர் ஒப்புதல் வழங்கிய ரஷ்யாவின் முடிவு சில மேற்கத்திய நாட்டு நிபுணர்களிடையே கவலையை எழுப்பியுள்ளது.

    ஹேப்பி நியூஸ்.. இதுவரை 70 சதவீதம் பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜாம்!.. இன்னும் 30%தானா.. வேலை ஈஸியாச்சே!ஹேப்பி நியூஸ்.. இதுவரை 70 சதவீதம் பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜாம்!.. இன்னும் 30%தானா.. வேலை ஈஸியாச்சே!

    ஜெர்மனி எச்சரிக்கை

    ஜெர்மனி எச்சரிக்கை

    Deutschlandfunk. வானொலியில் பேசிய ஜெர்மனிய சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான், " சோதகளை நிறைவடையாமல் கோடிக்கணக்கா மக்களுக்கு தடுப்பூசி போடுவதைத் தொடங்குவது ஆபத்தானது, தடுப்பூசியில் தவறுகள் இருந்தால் பலர் பலியாக வாய்ப்பு உள்ளது. எனவே ரஷ்யாவில் தற்போது என்ன நடக்கிறது என்பது குறித்து நான் மிகவும் சந்தேகிக்கிறேன்.

    சோதிக்கப்படவில்லை

    சோதிக்கப்படவில்லை

    எங்களுக்கு ஒரு ஆரம்ப, நல்ல தடுப்பூசி இருந்தால் நான் மகிழ்ச்சியடைவேன், ஆனால் நாம் அறிந்தவரை அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டதுதானா என்பது தெரியவில்லை. அதுதான் அடிப்படை பிரச்சினை, அதாவது ரஷ்யர்கள் எங்களிடம் மருந்து பற்றி அதிகம் சொல்லவில்லை. இது போதுமான அளவு சோதிக்கப்படவில்லை.

    10 சதவீதம் வெற்றி

    10 சதவீதம் வெற்றி

    ரஷ்யாவின் தடுப்பூசிக்கு சோவியத் யூனியன் ஏவிய உலகின் முதல் செயற்கைக்கோளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக "ஸ்பூட்னிக் வி" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
    மருத்துவ சோதனைகளில் சுமார் 10% மட்டுமே வெற்றிகரமாக உள்ளதாகவும் ரஷ்யா கௌரவத்திற்காக முதலில் மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக கூறுவதாகவும் சில நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    முற்றிலும் பாதுகாப்பானது

    முற்றிலும் பாதுகாப்பானது

    இந்த கருத்துக்களை மறுத்துள்ள ரஷ்ய அதிகாரிகள் இது முற்றிலும் பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளனர். இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் இது தன்னார்வ அடிப்படையில் மருத்துவ பணியாளர்களுக்கும், பின்னர் மூத்த குடிமக்களுக்கும் வழங்கப்படும் என்று ரஷ்ய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் பொதுமக்களுக்கு இந்த மருந்து அக்டோபரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    German Health Minister Jens Spahn said Russia's COVID-19 vaccine had not been sufficiently tested, adding the aim was to have a safe product rather than just being first to start vaccinating people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X