For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமர்சித்தவர்களை மூக்குடைத்த ரஷ்யா, சூப்பர் பதிலடி, மாயாஜாலம் நிகழ்த்திய 'ஸ்பூட்னிக்-வி' தடுப்பூசி!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவின் "ஸ்பூட்னிக்-வி" தடுப்பூசி ஆரம்ப கட்ட சோதனைகளில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனாவிற்கு எதிராக ஆன்டிபாடியை உருவாக்கி உள்ளதாக லான்செட் மருத்துவ இதழில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தடுப்பூசியை விமர்சித்தவர்களுக்கு பதிலடி தரும் வகையில் அமைந்திருப்பதாக லான்செட் மருத்துவ இதழ் பாராட்டி உள்ளது.

கொரோனா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தடுப்பூசியை உருவாக்க உலகின் பல்வேறு நாட்டு அரசுகளும், பெரிய மருந்து நிறுவனங்களும் போட்டி போட்டு மருந்து தயாரித்து வருகீன்றன. ஏனெனில் து உலகளவில் 850,000 க்கும் அதிகமான மக்களை கொரோனா கொன்றது சுமார் 2.7 கோடி மக்களை பாதித்துள்ளது.

6க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பாளர்கள் மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. இறுதி கட்டத்தில் உள்ள இந்த 6 மருந்தும் பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கப்படுகின்றது. அவற்றில் முக்கியமானது பிரிட்டனின் அஸ்ட்ராஜெனெகா மற்றும் அமெரிக்க மருந்து தயாரிப்பாளர்களான மாடர்னா மற்றும் ஃபைசர் உட்பட உள்ளிட்டவையாகும். இதேபோல் சீனாவின் தடுப்பூசியும் ரஷ்யாவின் தடுப்பூசியும் உள்ளன.

ரஷ்யாவின்....ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து...நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது...ஆய்வில் தகவல்!! ரஷ்யாவின்....ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து...நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது...ஆய்வில் தகவல்!!

நோய் எதிர்ப்பு திறன்

நோய் எதிர்ப்பு திறன்

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 'டி செல்கள் எனப்படும் நோயெதிர்ப்பு மண்டலத்தில் கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு திறனை உருவாக்கியதாக லான்செட் மருத்துவ இதழ் கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் டி செல்கள் வகிக்கும் பங்கை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர், சமீபத்திய கண்டுபிடிப்புகளின் படி, இந்த செல்கள் ஆன்டிபாடிகளை விட நீண்ட கால பாதுகாப்பை அளிக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

Ad5 அடினோவைரஸ்

Ad5 அடினோவைரஸ்

மாஸ்கோவின் கமலேயா நிறுவனம் உருவாக்கிய ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இரண்டு டோஸ்களாக நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொன்றும் வெவ்வேறு திசையன் அடிப்படையில் பொதுவாக ஜலதோஷத்தை ஏற்படுத்தும் மனித அடினோ வைரஸ்களான Ad5 மற்றும் Ad26க்கு எதிராக செயல்படுகிறது. எனவே இந்த தடுப்பூசி கொரோனாவின் செயல்திறனை குறைவானதாக மாற்றக்கூடும் என்று சில நிபுணர்கள் கூறியுள்ளனர், ஏனெனில் பலர் ஏற்கனவே Ad5 அடினோவைரஸுக்கு ஆளாகியுள்ளனர் மற்றும் அதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டனர். சீனாவிலும் அமெரிக்காவிலும், சுமார் 40% மக்கள் முந்தைய Ad5 வெளிப்பாட்டிலிருந்து அதிக அளவு ஆன்டிபாடிகளைக் கொண்டுள்ளனர். ஆப்பிரிக்காவில், இது 80% வரை அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய நிபுணர் தகவல்

ரஷ்ய நிபுணர் தகவல்

ரஷ்யாவின் கமலேயா இன்ஸ்டிடியூட்டில் இந்த தடுப்பூசியை உருவாக்கி வரும் ஆய்வாளர்களில் ஒருவரான டெனிஸ் லோகுனோவ், இதுபற்றி கூறும் போது, தடுப்பூசி பாதுகாப்பில் சமரசம் செய்யாமல், முந்தைய எந்தவொரு நோய் எதிர்ப்பு சக்தியையும் சமாளிக்க Ad5 இன் வலுவான அளவைப் பயன்படுத்துகிறது. அரிதான Ad26 அடினோவைரஸை அடிப்படையாகக் கொண்ட பூஸ்டர் டோஸ் மேலும் பயன்களை வழங்குகிறது, ஏனெனில் மக்கள்தொகையில் இரு வகைகளுக்கும் பரவலான நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றார்.

யாருக்கு பாதிப்பு இல்லை

யாருக்கு பாதிப்பு இல்லை

இதனிடையே இந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் நடத்தப்பட்ட ரஷ்யாவால் நடத்தப்பட்ட சோதனைகளிர்ல பங்கேற்ற 76 தன்னார்வால்களின் சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. இதன்படி, 100% பங்கேற்பாளர்களிடம் புதிய கொரோனா வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடிகளை தடுப்பூசி உருவாக்கி வருவதாகவும், கடுமையான பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்றும் லான்செட் மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி கண்டுபிடிப்பு

தடுப்பூசி கண்டுபிடிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டு பயன்பாட்டிற்காக ரஷ்யா உரிமம் வழங்கியது. இதன்படி மக்களின் பயன்பாட்டுக்காக பதிவு செய்யப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி என்ற பெருமையை ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பெற்றுள்ளது. எனினும் எந்தவொரு தரவுகளும் வெளியிடப்படுவதற்கு முன்பு அல்லது பெரிய அளவிலான சோதனை தொடங்குவதற்கு முன்பு வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆண்டிபாடி உருவாகிறது

ஆண்டிபாடி உருவாகிறது

மருத்துவ இதழ் முடிவுகளின் படி "38 தன்னார்வலர்களிடம் 42 நாள் சோதனை நடத்தப்பட்டதில் எந்தவிதமான மோசமான விளைவுகளும் அவர்களுக்கு ஏற்படவில்லை. மேலும் அந்த தடுப்பூசி ஆன்டிபாடி பதிலை வெளிப்படுத்துவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என லான்செட் மருத்துவ இதழ் கூறியுள்ளது. கொரோனா தொற்றுநோயைத் தடுப்பதற்கான தடுப்பூசியின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நிறுவுவதற்கு மருந்து பற்றிய பெரிய, நீண்டகால சோதனைகள் மற்றும் பெரிய கண்காணிப்பு தேவை" என்றும் அது கூறியது.

இந்த ஆண்டு இறுதியில்

இந்த ஆண்டு இறுதியில்

ரஷ்யா இந்த ஆண்டு இறுதிக்கு கொரோனா தடுப்பூசியை மாதத்திற்கு 1.5 மில்லியன் முதல் 2 மில்லியன் டோஸ் வரை உற்பத்தி செய்ய திட்டமிட்டுளளது. படிப்படியாக உற்பத்தியை ஒரு மாதத்திற்கு 6 மில்லியன் அளவுகளாக அதிகரிக்க விரும்புகிறது.

English summary
Russia's Covid-19 vaccine produced antibody response : The Lancet said
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X