For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா-சீனா டென்ஷனை குறைக்க களம் வந்த ரஷ்யா.. வெளியான தகவல்

Google Oneindia Tamil News

மாஸ்கோ: இந்தியா-சீனா இடையேயான பதட்டத்தை குறைப்பதற்கு திரைமறைவில், ரஷ்யா, முயற்சிகள் எடுத்து வரும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Recommended Video

    Russia -விடம் அவசரமாக 33 விமானங்களை வாங்கும் India.. மாஸ் திட்டம்

    ஆசிய பிராந்தியத்தின் மிகப் பெரிய நாடுகளில் இந்தியா மற்றும் சீனா போன்று ரஷ்யாவும் முக்கியமான ஒரு நாடு ஆகும். ஒரு காலகட்டத்தில் ஆசிய பிராந்தியத்தின் பெரிய அண்ணன் ரஷ்யாதான்.

    இந்த நிலையில்தான், லடாக் எல்லைப் பிரச்சனையில், இந்தியா மற்றும் சீன நாட்டு ராணுவங்கள் மோதிக் கொள்வதை, ரஷ்யா விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தோல்வி அடைந்த அமெரிக்க திட்டம்.. இந்தியா - சீனா சண்டையில் கால் வைக்கும் புடின்.. ரஷ்யாவின் பிளான்! தோல்வி அடைந்த அமெரிக்க திட்டம்.. இந்தியா - சீனா சண்டையில் கால் வைக்கும் புடின்.. ரஷ்யாவின் பிளான்!

    ரஷ்யா முயற்சி

    ரஷ்யா முயற்சி

    லடாக் எல்லையில் கடந்த 15ம் தேதி இருநாட்டு ராணுவத்திற்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், 17ம் தேதியே ரஷ்யா தனது சமாதான முயற்சிகளை தொடங்கியுள்ளது. அந்த நாட்டின் துணை வெளியுறவுத் துறை துணை அமைச்சர் இகோர் மோர்குலோவ் ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் பால வெங்கடேஸ் வர்மாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

    ஆலோசனை

    ஆலோசனை

    ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த ஆலோசனை கூட்டத்தில் எந்த மாதிரியான விஷயங்கள் விவாதிக்கப் பட்டது என்ற விவரத்தை முழுமையாக வெளியிடவில்லை. ஆனால் இரு நாடுகள் இடையேயான பதற்றத்தை குறைப்பதில் ரஷ்யா மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக இந்திய தூதரிடம் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தெரிவித்ததாக தூதரக வட்டாரங்கள் கூறுகின்றன.

    கூட்டமைப்புகள்

    கூட்டமைப்புகள்

    இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் ஆகிய மத்திய ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு, ஷாங்காய் கூட்டமைப்பு என்று அழைக்கபடுகிறது. இந்தியா மற்றும் சீனா இடையேயான இந்த மோதல் போக்கு என்பது இந்த கூட்டமைப்பின் குறிக்கோள்களை கேள்விக்குறியாக்கி விடும் என்பதோடு, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ,தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் கொள்கைகளையும் சிதைத்து விடும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் இந்திய தூதரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு

    ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு

    இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுமே தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை பேச்சு வார்த்தையின் மூலமாக தீர்த்துக் கொள்வதற்கான வலிமை கொண்டவை. எனவே, இந்த விஷயத்தில், ரஷ்யா, ஆக்கபூர்வமாக மட்டுமே செயல்படும் என்று அந்த ஆலோசனையின்போது திட்டவட்டமாக ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கூறியுள்ளாராம்.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின், ஊடகத்துறை செயலாளர், டிமிட்ரி பெஸ்கோவ், கடந்த புதன்கிழமை கூறுகையில், இந்தியா மற்றும் சீன எல்லை பிரச்சினை என்பது மிகவும் முக்கியமானது. இந்த விவகாரத்தை ரஷ்யா மிகுந்த உன்னிப்பாக கவனிக்கிறது. அதேநேரம் இரண்டு நாடுகளுமே பரஸ்பரம் இந்த பிரச்சினையை சரி செய்வதற்கான கட்டமைப்புகளை கொண்டுள்ளன என்று ரஷ்யா நம்புகிறது என்று தெரிவித்தார். இந்தியாவுக்கான ரஷ்ய தூதர், நிகோலே குடாஷேவ், ஜூன் 17ஆம் தேதி வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில், இந்தியா-சீனா எல்லையில் அமைதியை நிலை நிறுத்துவதற்காக இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடப்பது நம்பிக்கை அளிக்கிறது, என்று தெரிவித்து இருந்தார்.

    English summary
    Behind the scenes, Russia made efforts to reduce tensions between India and China, says sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X