For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து அடம்- ரஷ்யாவில் 1,000-த்தை தாண்டிய ஒருநாள் கொரோனா மரணங்கள்

Google Oneindia Tamil News

மாஸ்கோ: கொரோனாவை கட்டுப்படுத்த ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரித்த ரஷ்யாவில் அதனை போட்டுக் கொள்ள பெரும்பாலானோர் மறுத்து வருகின்றனர். இதனால் ரஷ்யாவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,000-த்தை தாண்டியதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

உலக நாடுகளில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. ரஷ்யாவில்தான் உலக நாடுகளில் அண்மைக்காலமாக ஒருநாள் கொரோனா மரணங்கள் அதிகமாக இருந்து வருகின்றன.

ரஷ்யாவில் முதல் முறையாக ஒருநாள் கொரோனா மரணங்கள் சனிக்கிழமையன்று 1,000-த்தை தாண்டியது. ரஷ்யாவில் சனிக்கிழமையன்று மட்டும் ஒரே நாளில் 1,002 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

பொதுக்கூட்டங்களில் யாரையும் தரக்குறைவாக பேச வேண்டாம்... ஆதரவாளர்களுக்கு சசிகலா அட்வைஸ்..! பொதுக்கூட்டங்களில் யாரையும் தரக்குறைவாக பேச வேண்டாம்... ஆதரவாளர்களுக்கு சசிகலா அட்வைஸ்..!

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

இத்தனைக்கும் ரஷ்யாவில் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி போடுவதில் பெரும்பாலான பொதுமக்களுக்கு ஆர்வம் இல்லை என்றே கூறப்படுகிறது. ரஷ்யாவில் இதுவரை 1%-க்கும் குறைவான பொதுமக்களே தடுப்பூசி போட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவில் கொரோனா மரணங்கள் அதிகம்

ரஷ்யாவில் கொரோனா மரணங்கள் அதிகம்

ரஷ்யாவில் இதுவரை மொத்தம் 79,58,384 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் சனிக்கிழமையன்று மட்டும் 33,208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. ரஷ்யாவில் சனிக்கிழமையன்று 1,002 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,22,315. ரஷ்யாவில் சனிக்கிழமையன்று கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 21,883. ரஷ்யாவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,981,907. ரஷ்யாவில் தற்போதைய நிலையில் 7,54,162 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியா 11-வது இடம்

இந்தியா 11-வது இடம்

ரஷ்யாவைத் தொடர்ந்து பிரேசிலில் 472, அமெரிக்காவில் 464, மெக்சிகோவில் 434, ருமேனியாவில் 350, உக்ரைனில் 277, துருக்கியில் 212, ஈரானில் 181, பிலிப்பைன்ஸில் 156, இங்கிலாந்தில் 148 என ஒருநாள் கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளன. உலக நாடுகள் அளவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் பட்டியலில் இந்தியா 11-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் சனிக்கிழமையன்று மொத்தம் 146 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

ஒருநாள் பாதிப்பில் 6-வது இடம்

ஒருநாள் பாதிப்பில் 6-வது இடம்

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 6-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில்தான் ஒருநாள் பாதிப்பு அதிகமாக பதிவாகி உள்ளது. இங்கிலாந்தில் சனிக்கிழமையன்று 43,423 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதற்கு அடுத்ததாக அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி, ருமேனியா ஆகிய நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Russia has registered Single Day Covid19 deaths crosses 1,000 for first time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X