For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஷ்யாவின் மற்றொரு கொரோனா தடுப்பூசியும் சக்சஸ்.. முதல் கட்ட டிரையலில் பாஸ்

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டில் இருந்து மேலும் ஒரு தடுப்பூசி முதல்கட்ட பரிசோதனைகளை வெற்றிகரமாக தாண்டி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Russia-ன் இரண்டாவது தடுப்பூசி.. முதல் சோதனை வெற்றி

    வெக்டர் ஸ்டேட் ரிசர்ச் சென்டர் ஆஃப் வைராலஜி அண்ட் பயோடெக்னாலஜி அமைப்பின் பரிசோதனை கூடத்தில் ஜூலை மாதம் 27 ஆம் தேதி கொரோனா வைரஸுக்கு எதிரான முதலாவது மனித பரிசோதனை துவங்கப்பட்டது.

    14 தன்னார்வலர்கள் இதில் கலந்துகொண்டு தடுப்பூசி பெற்றுக்கொண்டனர். இந்த பரிசோதனை முடிவுகள் வெற்றிகரமாக இருந்ததாக, இந்த மையத்தின் இயக்குனர் ரினாத் மக்ஷ்யூடோவ் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    அச்சோ பாவம்.. மழையில் நனைந்த நாயை.. துணியால் மூடிய இளம் பெண்.. வைரல் புகைப்படம்அச்சோ பாவம்.. மழையில் நனைந்த நாயை.. துணியால் மூடிய இளம் பெண்.. வைரல் புகைப்படம்

    43 தன்னார்வலர்கள்

    43 தன்னார்வலர்கள்

    இதையடுத்து, அடுத்ததாக 43 தன்னார்வலர்களுக்கு, தடுப்பூசி கொடுக்கப்பட்டு பரிசோதனைகளை துவங்குகிறது ரஷ்யா. ஏற்கனவே, ஸ்பூட்னிக் 5 என்ற பெயரில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஆகஸ்ட் 11ஆம் தேதி பதிவு செய்தது ரஷ்யா. உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசி தங்களுடையது என்று ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

    மற்றொரு நிறுவனம்

    மற்றொரு நிறுவனம்

    இந்த நிலையில் அதே நாட்டைச் சேர்ந்த மற்றொரு நிறுவனம் முதல் கட்ட பரிசோதனையில் பாஸ் செய்துள்ளது. மூன்று கட்ட பரிசோதனைகளையும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்துவிட்டு, அதை பதிவு செய்த கையோடு நவம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பெரிய அளவில் உற்பத்தி செய்யப்போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

    அமெரிக்கா, பிரிட்டன்

    அமெரிக்கா, பிரிட்டன்

    ஏற்கனவே அமெரிக்காவின் மாடர்னா, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி ஆகியவை, மூன்றாவது கட்ட பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில்தான் மேலும் ஒரு தடுப்பூசி உலகுக்கு அறிமுகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பரிசோதனைகள்

    பரிசோதனைகள்

    மக்ஷ்யூடோ கூறுகையில், "சோதனைகளில் பங்கேற்றவர்கள் உடல்நிலை நன்றாக உள்ளது. முதல்கட்டமாக தடுப்பூசி போடப்பட்டவர்கள், 21 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையை விட்டு வெளியேறினர். இப்போது அவர்களின் உடல் நிலையை நாங்கள் கண்காணித்து வருகிறோம். அவர்கள் அடுத்த 3, 6 மற்றும் 9வது மாதங்களில் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வார்கள்" என்று அவர் கூறினார்.

    English summary
    Russia's scientific center Vektor announced on Friday that its Covid-19 vaccine candidate successfully completed phase I of clinical trials and its ready to start its second stage.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X