For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகமே பாராட்டுன ரஷ்யாவுக்கும் இந்த நிலையா.. கொரோனா நோயாளிகள் கிடுகிடு உயர்வு.. ஷட் டவுன் ஆரம்பம்

Google Oneindia Tamil News

மாஸ்கோ: உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளி எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியதால், மார்ச் 28 முதல் ஜூன் 1 வரை ஹோட்டல், ரிசார்ட்ஸ் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை மூட ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்? அதிர்ச்சி ரிப்போர்ட்

    ரஷ்யாவில், கொரோனாவுக்கு, 1,036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், நான்கு பேர் இறந்துள்ளனர். இதனால் அங்கும் ஷட்டவுன், லாக்டவுன் என தடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன.

    உலகமே கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், அனைத்து நாடுகளின் ஆச்சரிய பார்வையும் ரஷ்யாவை நோக்கி திரும்பியிருந்தது.

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

    குறைவு

    குறைவு

    14.6 கோடி மக்கள் தொகை.. சீனாவுடன், சுமார் 4,200 கிலோ மீட்டர் தூர நீண்ட எல்லைப் பரப்பு.. இப்படி இருந்தும் கூட, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக குறைவாக இருப்பதுதான் இதற்கு காரணம். ரஷ்யாவில், கடந்த 23ம் தேதிவரை 306 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

    பிற நாடுகள்

    பிற நாடுகள்

    ரஷ்யா நடத்திய பரிசோதனையுடன் ஒப்பிட்டால், கொரோனா நோயாளிகள் விகிதம் என்பது 0.21% மட்டும்தான். உலகிலேயே, கொரோனா வைரஸ் குறைவாக பதிவாகியுள்ள இரண்டாவது நாடு ரஷ்யா. முதலாவது நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ். அது ரஷ்யாவுடன் ஒப்பிட்டால் குட்டி நாடாகும். அங்கு 0.11% என்ற அளவில் பாதிப்பு இருந்தது.

    சிங்கம்

    சிங்கம்

    எனவே, ரஷ்யாவை எல்லோரும் பாராட்டினர். இன்னும் சிலர், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்பதற்காக, சாலைகளில் சிங்கத்தை புடின் திறந்துவிட்டதாக போலி கதைகளை பரப்பினர். ஐரோப்பிய நாடுகளோ, ரஷ்யா உண்மையை, மறைக்கிறது என்றார்கள். ஆனால், இப்போது ரஷ்யாவும் பரபரத்துக் கிடக்கிறது.

    வேலை இல்லாத வாரம்

    வேலை இல்லாத வாரம்

    ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான ரஷ்யர்கள் பரந்த அளவில் அரசு நடத்தும் ஹோட்டல்கள், ரிசார்ட்ஸ், ஹெல்த் ஸ்பாக்கள் மற்றும் குழந்தைகள் முகாம்களில் விடுமுறையை கழிக்கிறார்கள். ஆனால், இவை அனைத்தையும் மூட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த வாரத்தை வேலை செய்யாத வாரமாக அறிவித்துள்ளார், நாட்டின் மோசமான பாதிப்புக்குள்ளான தலைநகர், மாஸ்கோ, இந்த வார இறுதியில் உணவு மற்றும் மருந்துகளை விற்பனை செய்பவர்களைத் தவிர அனைத்து கஃபேக்கள், உணவகங்கள் மற்றும் கடைகளை ஏப்ரல் 5 வரை மூடப்போகிறது.

    மாஸ்கோ

    மாஸ்கோ

    ரஷ்யாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை பல ஐரோப்பிய நாடுகளை விட மிகக் குறைவாகவே உள்ளது, ஆனால் மாஸ்கோவின் மேயர் புடினிடம், ஆலோசனையை நடத்தினார். அப்போது மாஸ்கோவில் பிரச்சினையின் உண்மையான அளவு அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை விட அதிகமாக உள்ளது என்று கூறினார். இதையடுத்து ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    English summary
    Russia ordered its vast network of State-run hotels, resorts and recreational facilities to shut down from March 28 until June 1, as its number of confirmed coronavirus cases rose past 1,000.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X