For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திடீரென ரஷ்யா சப்போர்ட்.. யுன்எஸ்சியில் இந்தியாவை நிரந்தரமாக சேர்க்க வேண்டும்.. அதிர்ச்சியில் சீனா!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தரமாக சேர்க்க வேண்டும் ரஷ்யா வெளிப்படையாக தெரிவித்து உள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பு சீனாவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

Recommended Video

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்.. India-க்கு Russia ஆதரவு

    ஐநா பாதுகாப்பு கவுன்சலில் உறுப்பினர்களை தேர்வு செய்ய கடந்த வாரம் வாக்கெடுப்பு நடந்தது. இந்த தேர்தலில் இந்தியா வெற்றிபெற்று தற்காலிக உறுப்பினராக ஆகியுள்ளது. இந்தியா 8வது முறையாக இதில் உறுப்பினர் ஆகிறது.

    இது இந்தியாவிற்கு ராஜாங்க ரீதியான வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அடுத்த இரண்டு வருடங்கள் இந்தியா இதில் உறுப்பினராக இருக்கும்.

    ராஜ்நாத் சிங் உடன் மீட்டிங்?.. சீன ஊடகம் வெளியிட்ட செய்தி.. இந்தியா அதிரடி மறுப்பு.. என்ன நடந்தது? ராஜ்நாத் சிங் உடன் மீட்டிங்?.. சீன ஊடகம் வெளியிட்ட செய்தி.. இந்தியா அதிரடி மறுப்பு.. என்ன நடந்தது?

    ரஷ்யா என்ன சொன்னது

    ரஷ்யா என்ன சொன்னது

    இந்த நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தரமாக சேர்க்க வேண்டும் ரஷ்யா வெளிப்படையாக தெரிவித்து உள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பு சீனாவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அதன்படி நேற்று நடந்த இந்தியா - சீன - ரஷ்யா இடையிலான மூன்று நாடுகள் ஆலோசனையில் ரஷ்யா இந்த கருத்தை கூறியுள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினராக இணைந்ததற்கு வாழ்த்துக்கள்.

    வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கள்

    இந்தியாவின் வருகை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலை வலுப்படுத்தும். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றங்களை கொண்டு வர வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தரமாக சேர்க்க வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக சேர முதல் வரிசையில் நிற்கும் தகுதியான வேட்பாளர் இந்தியாதான். அதனால் இந்தியாவை இதில் சேர்க்க வேண்டும் என்று ரஷ்யா கூறியுள்ளது .

    சீனா அதிர்ச்சி

    சீனா அதிர்ச்சி

    ரஷ்யாவின் இந்த திடீர் அறிவிப்பு சீனாவிற்கு பெரிய அதிர்ச்சியாக மாறியுள்ளது. சீனா ரஷ்யாவிடம் இருந்து இந்த முடிவை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்றும் கூறுகிறார்கள். ஐநா பாதுகாப்பு கவுசிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதை சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்த குழுவில் இருப்பது பாதுகாப்பு ரீதியாக, ராஜாங்க ரீதியாக பெரிய பலத்தை கொடுக்கும். இதில் இந்தியா இணைத்தால் சீனாவிற்கு அது பெரிய சிக்கலாக மாறும்.

    என்ன முயற்சி

    என்ன முயற்சி

    இதனால் இந்தியாவை எப்படியாவது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இணைய விடாமல் சீனா தடுத்து வருகிறது. தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, இந்தியாவிற்கு எதிராக சீனா காய் நகர்த்தி வருகிறது. இந்த நிலையில் இதில் இந்தியாவை இணைக்க ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கு முன்பே இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா, யுகே கருத்து தெரிவித்துவிட்டது. இன்னும் பிரான்ஸ் மட்டுமே இந்த குழுவில் இந்தியாவை ஆதரிக்கவில்லை.

    பிரான்ஸ் மட்டும்

    பிரான்ஸ் மட்டும்

    பிரான்சும் இதில் இந்தியாவை ஆதரிக்க வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் இந்தியா பெரும்பாலும் ஐநா பாதுகாப்பு கவுன்சலில் நிரந்தர உறுப்பினராக வாய்ப்புள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் என்பது உலகின் சக்தி வாய்ந்த பாதுகாப்பு கவுன்சில் ஆகும். இந்த குழுவில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, யூகே , அமெரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளது. மற்ற 10 நாடுகள் தற்காலிக உறுப்பினராக 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படும்.

    English summary
    Russia supports India for Grabbing a permanent seat in UNSC, shocks China.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X