For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு.. போன் செய்து வேலை கொடுக்கும் ரோபோட்.. இது ரஷ்ய அதிசயம்!

ரஷ்யாவில் உருவாக்கப்பட்டு இருக்கும் ''வேரா'' என்ற ரோபோட் இண்டர்வியூ நடத்தும் பணிகளை செய்து வருகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    வேலை தேடுபவர்களுக்கு போன் செய்து வேலை கொடுக்கும் ரோபோட்.. ரஷ்ய அதிசயம்!

    மாஸ்கோ: ரஷ்யாவில் உருவாக்கப்பட்டு இருக்கும் ''வேரா'' என்ற ரோபோட் இண்டர்வியூ நடத்தும் பணிகளை செய்து வருகிறது.

    கடந்த 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ரோபோட், தற்போது மிகவும் சரியான வகையில் வேலை செய்து வருகிறது. இது இண்டர்வியூ செய்வது மட்டுமில்லாமல், போன் செய்து வேலை தேடுபவர்களை அதுவாக அழைக்கும்.

    ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த ரோபோட் இந்த வேலைகளை எல்லாம் தானாக செய்யும். யார் வேண்டுமானாலும் இதை பணம் கொடுத்து வாங்கி பணிக்கு அமர்த்திக் கொள்ளலாம்.

    என்ன செய்கிறது

    என்ன செய்கிறது

    இந்த ரோபோட் வேரா, தினமும் 1500 பேர் வரை இண்டர்வியூ செய்ய முடியும். அவர்களிடம் கேள்வி கேட்டு, அது சரியான பதிலா என்று பரிசோதிக்கும். இந்த ரோபோட் தேர்ந்தெடுக்கும் நபர்கள் எல்லோரும் மிகவும் சரியான திறமைகளுடன் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. பெண், ஆண் என்ற இரண்டு குரலில் இந்த ரோபோட் பேசும். அதேபோல் இது கணினி குரலில் இல்லாமல் சாதாரண மனிதர்களின் குரலிலேயே பேசும்.

    பயன்பாட்டிற்கு வந்தது

    பயன்பாட்டிற்கு வந்தது

    இந்த இண்டர்வியூ செய்யும் ரோபோட் ஏற்கனவே ரஷ்யாவில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. தினமும் 200 நிறுவனங்கள் இந்த ரோபோட் மூலம் தங்கள் நிறுவனத்திற்கு ஆள் எடுக்கிறார்கள். சரியாக சொல்ல வேண்டும் என்றால், இந்த ரோபோட்கள் மூலம் தினமும் 5300 இண்டர்வியூக்கள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதுவரை தேர்வான நபர்களில் 95 சதவிகிதம் பேர் மிகவும் சரியான திறமையுடன் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளது.

    எப்படி வேலை வாங்க வேண்டும்

    எப்படி வேலை வாங்க வேண்டும்

    இதை வேலைவாங்குவது மிகவும் எளிதானது. ஒரு நிறுவனம் அதற்கு ஆள் எடுக்கவேண்டும் என்றால், இந்த ரோபோட்டிடம் என்ன வேலைக்கு ஆள் எடுக்க வேண்டும் என்று சொன்னால் போதும் . அதுவே இணையம், அதில் இருக்கும் புத்தகங்கள் என எல்லாவற்றையும் ஆராய்ந்து, என்ன மாதிரியான கேள்விகள் கேட்க வேண்டும் என்று முடிவு செய்யும். பின் அதை வேலை தேடி வரும் நபர்களிடம் கேட்டு சரி செய்து கொள்ளும். நாம் கேட்கும் கேள்விக்கும் ரோபோட் பதில் சொல்லும்.

    வேலை கொடுக்கும்

    வேலை கொடுக்கும்

    முக்கியமாக இது இன்னொரு வேலையும் செய்கிறது. அதன்படி வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்றால் இதுவே இணையத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருக்கும் நபர்களை தேர்வு செய்து இண்டர்வியுவிற்கு அழைப்பு விடுக்கும். அதாவது நாம் வேலை தேடும் இணையம் எதிலாவது பதிந்து இருந்தால், இந்த ரோபோட் அதை கண்டுபிடித்து நம்மை இண்டர்வியுவிற்கு அழைப்பு விடுக்கும்.

    English summary
    Russia uses 'Vera' robot as an HR in companies for the interview. It will search for resumes on the internet and take interview on them and will select proper person for companies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X