For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்ச்சை ஆன 2018 கால்பந்து உலகக் கோப்பை போட்டி.. போதை பொருள் பயன்படுத்த அனுமதியா?

2018 கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் ரசிகர்களுக்கு அதிக அளவில் போதை பொருள் விற்பனை நடக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

மஸ்கோ: 2018 கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் ரசிகர்களுக்கு அதிக அளவில் போதை பொருள் விற்பனை நடக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது. ரசிகர்கள் அதிகமாக போதை பொருள் பயன்படுத்துவார்கள் என்று கூறியுள்ளனர்.

ரஷ்யாவில் நிலவும் மோசமான சட்ட ஓட்டைகள் காரணமாக இந்த சம்பவம் நடக்க இருக்கிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் கூட பாதிக்கப்படலாம்.

இதுவரை விளையாட்டு போட்டிகளால் இதுபோல போதை பொருட்கள் விற்கப்பட்டது இல்லை. முதல்முறையாக இப்படி ரஷ்யா ஒரு மோசமான காரியத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

ரஷ்யா

ரஷ்யா

இந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டி ரஷ்யாவில் நடக்கிறது. ரஷ்யாவில் இருக்கும் 11 நகரங்களில் இந்த போட்டிகள் நடக்க உள்ளது. ஜூன் மாதம் இந்த போட்டிகள் நடக்க இருக்கிறது.

கொண்டு வருவார்கள்

கொண்டு வருவார்கள்

இந்த போட்டிக்கு ஹெராயின், கொக்கெய்ன் போன்ற போதை பொருட்களை கொண்டு வர எந்த தடையும் கிடையாது. உள்ளே எளிதாக மைதானத்திற்குள் கொண்டு செல்ல முடியும். ரஷ்யா நாட்டு மக்கள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு பயணிகளும் போதை பொருள் கொண்டு செல்ல முடியும்.

என்ன விதி

என்ன விதி

ஹெராயின், கொக்கெய்ன் போன்ற போதை பொருட்களை பயன்படுத்த சரியான ஆவணங்கள் இருந்தால் மட்டும் போதும். மருத்துவர்கள் கொடுக்கும் கடிதத்தை காட்டி இதை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். ரஷ்யா உள்ளிட்ட நான்கு நாடுகளில் இதுபோன்ற விதி இருக்கிறது.

விநியோகம் செய்வார்கள்

விநியோகம் செய்வார்கள்

இதனால் எளிதாக விநியோகம் செய்ய முடியும். வாங்குபவர்களும் மருத்துவ சான்று வைத்து இருக்க வேண்டும். ஆனால் இந்த மருத்துவ சான்றுகளை பெறுவது மிகவும் எளிது என்று கூறப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த கால்பந்து போட்டியில் போதை பொருள் அதிகம் விளையாடும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

English summary
Russia will allow drugs easily into the stadiums of 2018 FIFA WORLD CUP. Under their new rule, it will be easy thing to get drug into office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X