For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உணவாக அனுப்பப்பட்ட ஆடு.. புலிக்கு நண்பனாகியது.. ஆனால் நடந்த சோகம்!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள மிருககாட்சி சாலையில் புலிக்கு உணவாக அனுப்பப்பட்ட ஆடு பல ஆண்டுகளாக நட்பாக பழகி வந்தது.ஆனால் அண்மையில் திடீரென உடல்நலக்குறைவால் ஆடு பரிதாபமாக உயிரிழந்தது.

ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் அருகே உள்ள மிருக காட்சி சாலையில் கடந்த 2015ம் ஆண்டு சைபீரிய புலிக்கு இரவில் உணவாக தைமூர் என்ற ஆட்டை மிருக காட்சி ஊழியர்கள் வைத்தனர்.

ஆனால் கடித்து குதறி சாப்பிட வேண்டிய புலி என்ன நினைத்ததோ தெரியவில்லை. திடீரென அதன் மீது அன்பு மழை பொழிந்தது. ஆடும் புலியும் நட்பாக பழகின.

நண்பர்கள்

நண்பர்கள்

இதனால் அந்த ஆட்டை ஊழியர்கள் இறைக்காக வைக்காமல் புலியுடன் தொடர்ந்து பழகவிட்டனர். இதையடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆடும் புலியும் நட்பு பாராட்டி வந்தன.

ஆடு புலி நட்பு

ஆடு புலி நட்பு

இரண்டும் மிருக காட்சி சாலையில் விளையாடும் புகைப்படங்கள் வீடியோக்கள் பல வந்துள்ளன. புலியின் படுக்கையில் ஆடு ஏறி படுத்த போது கூட அது கோபப்பட்டது இல்லை.

வம்பிழுத்தது

வம்பிழுத்தது

இந்நிலையில் ஆட்டுக்கு புலி மேல் பயம் சுத்தமாக போனது. இதனால் அடிக்கடி வம்பிழுத்து விளையாடி சண்டை போட்டது. இதை பெரிதாக கண்டுகொள்ளாமல் விளையாடிவந்தது புலி.

ஆட்டை எறிந்துவிட்டது

ஆட்டை எறிந்துவிட்டது

ஆனால் 2016ம் ஆண்டு ஜனவரியில் புலியை ஆடு வம்பிழுந்து விளையாடிது. அப்போது கோபம் அடைந்த புலி திடீரென ஆட்டினை வாயில் கவ்வி மலையில் இருந்து தூக்கிபோட்டுவிட்டது.

மாஸ்கோவி சிகிச்சை

மாஸ்கோவி சிகிச்சை

இதனால் தைமூர் ஆட்டுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மிருக காட்சி சாலை ஊழியர்கள் ஆட்டையும் புலியையும் தனியாக பிரித்து கிச்சைக்காக மாஸ்கோவுக்கு அனுப்பினர், ஆனால் புலி தாக்கியதில் இருந்து ஆடு ஒருபோதும் முழுமையாக மீளவில்லை, சஃபாரி பூங்காவில் தொடர்ந்து வசித்து வந்தது.

மக்கள் வேதனை

மக்கள் வேதனை

இந்நிலையில் கடந்த நவம்பர் 5ம் தேதி உடல் நலக்குறைவால் தைமூர் ஆடு இறந்தது. புலியும் ஆடும் நட்பு பாராட்டுவது என்பது உலக அதிசயம்ஆகும். அந்த புலியும் ஆடும் எதிரிகளாக இருந்தாலும் நட்பு பாராட்ட வேண்டும்என்ற தத்துவத்தை சொல்லியிருப்பதாக அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

English summary
russian Goat which had an unlikely friendship with a tiger, A goat has died of ‘natural causes’,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X