For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐரோப்பிய எல்லைகளை நோக்கி ரஷியாவின் அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகள்

By Mathi
Google Oneindia Tamil News

மாஸ்கோ: ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளை எல்லைப் பகுதியில் ரஷியா நிறுத்தியுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் எல்லையையொட்டிய பால்டிக் கடற்பரப்பு அருகே ரஷியா அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளை நிறுத்தியிருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அதே நேரத்தில் ரஷியாவும் இதை உறுதிப்படுத்தியிருந்தாலும் எந்த ஒரு இலக்கையும் நோக்கி நிறுத்தாமல் நாட்டின் பாதுகாப்புக்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் லாத்வியா நாட்டின் பாதுகாப்பு அமைச்சரோ, தேவையற்ற அரசியல் பதற்றத்தை ரஷியா உருவாக்குகிறது. இத்தகைய அணு ஆயுத ஏவுகணைகளை நிறுத்தி வைக்க ரஷியாவுக்கு எந்த ஒரு காரணமுமே இல்லை என்று கூறியுள்ளார். மேலும் பிராந்தியத்தில் தம்மை வல்லரசாக நினைத்துக் கொண்டு ரஷியா செயல்படுகிறது என்றார் அவர்.

Russian missile movements stir tension

இதேபோல் போலந்து வெளியுறவு அமைச்சகமும் ரஷியாவின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது. ரஷியா தற்போது நிறுத்தியிருக்கும் ஏவுகணைகளால் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலந்து, லிதுவேனியா மற்றும் லாத்வியாவை எளிதில் தாக்க முடியும் என்பதுதான் பதற்றத்தின் பின்னணி.

English summary
Russia has stationed missiles in its Baltic Sea exclave of Kaliningrad, the pro-government newspaper Izvestia reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X