For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எகிப்தில் 224 பேருடன் சென்ற விமானம் வெடித்து சிதற தீவிரவாதிகளே காரணம்: ரஷ்யா அறிவிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

மாஸ்கோ: எகிப்தின் ஷினாய் தீபகற்பகத்தில் 224 பேருடன் ரஷ்யாவின் விமானம் வெடித்து சிதறி விழ காரணம் தீவிரவாதிகளே என்று ரஷ்யா அதிகாரப்பூர்வமாக குற்றம்சாட்டியுள்ளது. இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர் என்று ரஷ்யா அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Russian plane crash in Sinai a terrorist attack - Russian Security Service

எகிப்தில் இருந்து அக்டோபர் 31-ந் தேதியன்று தேதியன்று 224 பேருடன் புறப்பட்ட ரஷ்யாவின் ஏ231- விமானம் ஷினாய் தீபகற்பகம் அருகே நடுவானில் வெடித்து சிதறியது. இதில் பயணித்த 224 பேருமே உயிரிழந்துவிட்டனர். இந்த விமான விபத்து எப்படி நிகழ்ந்தது? பயங்கரவாதிகள் தாக்குதலில் வெடித்துச் சிதறியதா? என யூகங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் ரஷ்யா அதிபர் புதினை அந்நாட்டு பாதுகாப்புத் துறை தலைவர் அலெக்ஸாண்டர் இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, விமானத்தை தீவிரவாதிகள் வெடிபொருட்கள் மூலம் வெடித்து சிதற வைத்துள்ளனர். விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து ஒரு பயங்கரவாத தாக்குதலே என விளக்கம் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஷினாய் விமான தாக்குதலுக்கு காரணமான நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர் என்று அந்நாட்டு அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

English summary
The Russian plane crash in Sinai, Egypt, was caused by a terrorist attack as traces of explosives have been found in the wreckage of the plane.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X