For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசியல் சாசனத்தில் திருத்தம்.. 2036ஆம் ஆண்டு வரை புதின் அதிபராக நீடிக்க மக்கள் பேராதரவு

Google Oneindia Tamil News

மாஸ்கோ: வரும் 2036ஆம் ஆண்டு வரை விளாதிமிர் புதின் ரஷ்ய அதிபராக பதவி வகிக்கும் அரசியல் சாசனத்திற்கு அந்த நாட்டு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

ரஷ்யாவில் அதிபராக உள்ளவர் புதின். இவரது பதவிக் காலம் 6 ஆண்டுகள் ஆகும். அந்த நாட்டின் அரசியல் சாசனப்படி ஒருவரே இரு முறைக்கு மேல் அதிபர் பதவியில் நீடிக்க முடியாது.

கடந்த 2000-ஆம் ஆண்டில் இருந்து 2008-ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்து வந்த புதின், 2012-ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். அதன் பின்னர் 2012-ஆம் ஆண்டு முதல் புதின் ரஷ்ய அதிபராக பதவி வகித்து வருகிறார்.

2-வது உலகப் போரின் 75-வது ஆண்டு வெற்றி விழா- மாஸ்கோ அணிவகுப்பில் இந்திய ராணுவம் பங்கேற்பு 2-வது உலகப் போரின் 75-வது ஆண்டு வெற்றி விழா- மாஸ்கோ அணிவகுப்பில் இந்திய ராணுவம் பங்கேற்பு

தீர்மானம்

தீர்மானம்

வரும் 2024-ஆம் ஆண்டுவரை அவரது பதவிக்காலம் உள்ளது. இந்த நிலையில் அவரது பதவிக் காலத்தை மேலும் இரு முறை அதாவது 2036 ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் நீட்டிப்பது குறித்து அந்நாட்டு அரசியலமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாக்குகள்

வாக்குகள்

எனினும் இந்த விவகாரத்தில் வாக்காளர்களின் ஒப்புதலும் மிகவும் முக்கியமானது என கூறிய புதின் வாக்கெடுப்பையும் நடத்தினார். இந்த வாக்கெடுப்பு கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. 7 நாட்கள் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் புதினும் வாக்களித்தார். வாக்குச் சீட்டு முறையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நடைபெற்று வருகிறது.

21 சதவீதம்

21 சதவீதம்

இதுவரை எண்ணப்பட்ட 98 சதவீதம் வாக்குகளில் புதினுக்கு ஆதரவாக 76.9 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். 21 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக பதிவு செய்துள்ளார்கள். இதனால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதற்கு மக்களின் ஆதரவு கிடைத்துவிட்டது.

வாக்கெடுப்பு

வாக்கெடுப்பு

எனினும் இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த வாக்கெடுப்பே பொய்யானது என தெரிவித்துள்ளனர். தற்போது 67 வயதாகும் புதின் அவரது 83 ஆவது வயது வரை அதிபராக பதவி வகிப்பார். இதுகுறித்து தேர்தல் குழுவின் தலைவர் எல்லா பாம்ஃபிலோவா கூறுகையில் இந்த வாக்கெடுப்பு வெளிப்படைத்தன்மையுடன் நடந்தது என்றார்.

English summary
Russian people allows Vladimir Putin to extend his rule until 2036.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X