For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாய் திறந்த ரஷ்யா.. ஜோ பிடனுக்கு வாழ்த்து சொன்ன புதின்.. சஸ்பென்ஸ் ஓவர்

Google Oneindia Tamil News

மாஸ்கோ: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.

Russian President Vladimir Putin congratulates Joe Biden on US election victory: Kremlin

அங்கு வெற்றிக்குத் தேவை 270 பிரதிநிதிகள் வாக்குகள். 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றார் ஜோ பிடன். எனவே தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் முதலில் ஊடகங்களின் கணிப்பு மூலமாகத்தான் வெற்றி அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடந்து ஒரு மாத காலத்திற்கு பிறகுதான், அதிகாரப்பூர்வமாக அனைத்து மாகாணங்களும் வெற்றிக்கான சான்றிதழை அளித்தன.

ஆனால் ரஷ்யா மட்டும் பிடனுக்கு வாழ்த்து கூறவில்லை. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் தேர்தலுக்கு மறுநாளே வாழ்த்துக்கள் தெரிவித்தன.

 அமெரிக்க மையவாத கட்சி கொள்கையை வரிக்கு வரி கட், பேஸ்ட் செய்த கமல்ஹாசனின் மநீம: ரவிக்குமார் அட்டாக் அமெரிக்க மையவாத கட்சி கொள்கையை வரிக்கு வரி கட், பேஸ்ட் செய்த கமல்ஹாசனின் மநீம: ரவிக்குமார் அட்டாக்

இந்த நிலையில், ரஷ்ய அரசு ஊடகம் தரப்பில், கூறியுள்ளதாவது: அதிகாரபூர்வமான தேர்தல் முடிவுக்காக நாங்கள் காத்திருந்தோம். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பினும் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களைத் தீர்க்க இரு நாடுகளும் உதவ முடியும் என்று நம்புகிறோம் என்று அதிபர் புதின் தெரிவித்தார்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Russian President Vladimir Putin on Tuesday congratulated Joe Biden on his victory in the U.S. presidential election, after Biden won the state-by-state Electoral College vote that officially determines the U.S. presidency, the Kremlin said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X