For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷ்ய அதிபர் புதினின் ஒரே எதிரி தேர்தலில் போட்டியிட தடை

By BBC News தமிழ்
|
ரஷ்ய அதிபர் புதினின் ஒரே எதிரி தேர்தலில் போட்டியிட தடை
Getty Images
ரஷ்ய அதிபர் புதினின் ஒரே எதிரி தேர்தலில் போட்டியிட தடை

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி, அடுத்த வருடம் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால், தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழந்துவிட்டார் என ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால், இந்த முடிவு அரசியல் நோக்கம் கொண்டது என அலெக்ஸி நவால்னி கூறுகிறார்.

அடுத்த வருடம் மார்ச் மாதம் நடக்க உள்ள வாக்குப்பதிவைப் புறக்கணிக்குமாறு தனது ஆதரவாளர்களை நவால்னி கேட்டுக்கொண்டுள்ளார்.

41 வயதான அலெக்ஸி நவால்னி அதிபர் புதினுக்கு சவாலாக இருக்கக்கூடிய ஒரே வேட்பாளராகப் பரவலாக கருதப்பட்டார்.

''வாக்காளர்களால் ஒரு வேலைநிறுத்தத்தை நாங்கள் அறிவிக்கிறோம்.'' என தேர்தல் ஆணையத்தின் முடிவுக்குப் பிறகு பேசிய நவால்னி கூறினார். நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்போவதாகவும் அவர் கூறுகிறார்.

ரஷ்ய அதிபர் புதினின் ஒரே எதிரிக்கு தடை
AFP
ரஷ்ய அதிபர் புதினின் ஒரே எதிரிக்கு தடை

ஊழல் எதிர்ப்பு பிரசாரத்தினாலும், புதினுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களாலும் அறியப்படும் நவால்னிக்கு, மோசடி குற்றச்சாட்டுகளால் ஐந்து ஆண்டு இடைநீக்கம் தண்டனை வழங்கப்பட்டது.

''13 உறுப்பினர்களில் 12 பேர் வேட்பாளராக அவரது விண்ணப்பத்தை நிராகரித்தனர். நவால்னி தகுதி இழப்பு செய்யப்பதில் சட்டப்படியே நடந்துகொண்டதாக'' தேர்தல் ஆணையத்தின் தலைவர் எல்லா பாம்பில்லோவா கூறுகிறார்.

ரஷ்யாவின் நிலைமை குறித்த உண்மைகளைத் தான் பேசுவதைத் தடுக்கவே இந்த வழக்கு போடப்பட்டதாக நவால்னி கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
Russian opposition leader Alexei Navalny has been formally barred from competing in next year's presidential election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X