For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்ப்பிணி நாயை உயிருடன் நிலத்தில் புதைத்த அதிகாரிகள் - காப்பாற்றிய தம்பதி!

Google Oneindia Tamil News

பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவில் நடைபாதைக் குழிக்குள் நிலத்தடியில் சிக்கி கர்ப்பிணி நாய் ஓன்று தவித்து வந்த நிலையில் ஒருவரின் மனிதாபிமானத்தினால் உயிர் பிழைத்துள்ளது. இச்சம்பவம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.

ரஷ்யாவின் வொரென் நகரத்தில் உள்ள சாலை வழியாக சென்று கொண்டிருந்த வடிம் ரஸ்டாமுக்கு நாய் ஒன்று குரைக்கும் சத்தம் கேட்டது. ஆனால் அருகில் எந்த நாயுமே இல்லை.

Russian residents rescue pregnant dog buried alive

சத்தத்தை கவனித்து கேட்ட வடிம் மற்றும் அவரது மனைவி போலீசாருக்கு தகவல் அளித்து விட்டு அந்த இடத்தை தோண்ட ஆரம்பித்தனர். தோண்டி காப்பாற்றிய போதுதான் அது கர்ப்பிணி என்பதும் தெரியவந்தது.

அதன்பிறகு அந்த கர்ப்பிணி நாய் பலமணி நேரப் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் காப்பாற்றப்பட்டது. நாய் இருப்பது தெரியாமல் 2 நாட்களுக்கு முன்பு அந்த இடத்தில் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் நடைபாதை அமைத்து விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A Russian couple has rescued a pregnant dog that was buried alive for two days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X