For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தண்ணியைப் போட்டு நடந்தா தகராறு.. இந்தத் தண்ணி மேல நடந்தா வரலாறு..!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவின் தஸ் ஏரியை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். எல்லாம் காரணமாகத்தான். கோடை காலத்தில் இந்த ஏரிக்கு வந்து இங்குள்ள நீரில் குளித்தும், அதில் படுத்துக் கிடந்தும், அதில் உள்ள சேற்றை எடுத்து உடலில் பூசிக் கொள்வதும் இங்கு சகஜமானது.

இப்போது கோடைகாலம் என்பதால் தஸ் ஏரிக்கு கூட்டம் அலை மோதுகிறது. நீரில் மிதந்தபடியும், நடந்தபடியும், படுத்த நிலையில் புத்தகம் படித்தபடியும் மக்கள் தங்களது "சடங்குகளை" நிறைவேற்றி வருகின்றனர்.

பலர் சேற்றை எடுத்துப் பூசி சன் பாத் எடுக்கின்றனர். பலர் சேற்றை ஒருவர் மீது ஒருவர் வாரியிறைத்து விளையாட்டிலும் ஈடுபடுகின்றனர்.

காக்கேஸியா பிராந்திய ஏரி

காக்கேஸியா பிராந்திய ஏரி

ரஷ்யாவின் தென் மேற்கு சைபீரியாவில் காக்கேஸியா பிராந்தியத்தில் உள்ளது இந்த தஸ் ஏரி. ரஷ்யாவில் மிகவும் பிரபலமானது.

மருத்துவக் குணம் கொண்ட ஏரி

மருத்துவக் குணம் கொண்ட ஏரி

இந்த ஏரி மருத்துவக் குணம் கொண்டதாக மக்களால் நம்பப்படுகிறது. இங்குள்ள ஏரி மண் மிகவும் நல்லது என்று மக்கள் நம்புகிறார்கள்.

கருப்பு நீல மண் படிவு

கருப்பு நீல மண் படிவு

இந்த ஏரியில் உள்ள கருப்பு மற்றும் நீலம் கலந்த மண் படிவை எடுத்து உடலில் பூசிக் கொண்டால் நோய்கள் விலகும் என்பது மக்களின் நம்பிக்கை.

செம உப்புத் தண்ணி பாஸ்

செம உப்புத் தண்ணி பாஸ்

வழக்கமாக ஏரி நீர் நல்ல நீராக இருக்கும். ஆனால் இது சரியான உப்புத் தண்ணீராகும். இதில் குளித்தால் உடலில் உள்ள வியாதிகள் போகும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

நீரில் நடப்பார்கள்

நீரில் நடப்பார்கள்

இந்த ஏரியில் அதிக உப்பு உள்ளதால் இதில் யாரும் மூழ்க முடியாது. கிட்டத்தட்ட கடின நீர் போல இந்த நீர் உள்ளதால் இதில் நடக்கலாம், படுத்துக் கொள்ளலாம். மூழ்க மாட்டோம். இந்த ஏரி நீரின் கடுமையான உப்புத் தன்மை காரணமாக சைபீரியாவின் சாக்கடல் என்றும் இதற்கு இன்னொரு பெயர் உண்டு.

ஏரியில் மிதக்கும் மக்கள் கூட்டம்

ஏரியில் மிதக்கும் மக்கள் கூட்டம்

தற்போது கோடைகாலம் என்பால் ரஷ்யர்கள் பலரும் இந்த ஏரிக்குப் படையெடுத்து வருகின்றனர். இதனால் தஸ் ஏரி கூட்டம் நிரம்பிக் காணப்படுகிறது.

English summary
People deceptively ‘walk’ on water as they go for a swim in the waters of Tus lake in Khakassia region, southwest of the Siberian city of Krasnoyarsk, Russia, yesterday. During the summer, Russians from different regions travel to lake Tus, famed for the curative properties of its black and blue sediments, to bathe in the salty water and smear themselves with mud.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X