For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”சார்க்” ஆலோசனைக் கூட்டம் நேபாளில் இன்று துவக்கம்- இந்தியா சார்பில் சுஷ்மா சுவராஜ் பங்கேற்பு

Google Oneindia Tamil News

காத்மாண்டு: நேபாளத்தில் நடைபெறவிருக்கும் 3 நாள் சார்க் ஆலோசனைக் கூட்டம் இன்று முதல் துவங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்ள உள்ளார்.

தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பான "சார்க்" உச்சி மாநாட்டிற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் நேபாள நாட்டில் இன்று துவங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இது 37வது உச்சி மாநாட்டுக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Saarc meet begins today

"சார்க்" உச்சி மாநாட்டுக்கு முன்பாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜும், வெளியுறவு செயலாளரும், சார்க் அமைப்பின் இணை செயலாளருமான எஸ்.ஜெய்சங்கரும் கலந்து கொள்கிறார்கள்.

நாளை மறுநாள் நடைபெற உள்ள வெளியுறவு செயலாளர்கள் பேச்சுவார்த்தையின் போது, எஸ்.ஜெய்சங்கரும், பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் அய்ஜாஸ் அகமது சவுத்ரியும் சந்தித்து பேசுவார்கள் என எதிர்பாரர்க்கப்படுகிறது.

English summary
Preparations have been completed for the 37th meeting of Saarc Council of Ministers at Saarc Foreign Minister level which begins in Pokhara on Thursday. Six foreign ministers of the member states will be participating in the event also called ‘Mini Saarc Summit'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X