300 ஆண்டுக்கு முன் மூழ்கிய கப்பல்.. ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் தங்கம்... உரிமையாளர் கண்டுபிடிப்பு!

நியூயார்க்: சில வாரங்களுக்கு முன் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட 310 வருட பழமையான கப்பலின் வரலாறும், அதன் உரிமையாளரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
சரியாக இரண்டு வாரங்களுக்கு முன் ரெமஸ் 6000 என்று அந்த ரோபோ நீர் மூழ்கி கப்பல், சான் ஜோஸ் என்ற சரக்கு கப்பலை கண்டுபிடித்துள்ளது. கொலம்பியா கடல் பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டது.
இது 310 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் ஆகும். ஜெஃப் என்ற கடலியல் ஆராய்ச்சியாளர், இந்த கப்பலை கண்டுபிடித்துள்ளார்.

எப்படி கண்டுபிடித்தார், எங்கே
ஜெஃப் கடல் அடிப்பகுதியை ஆராய்ச்சி செய்ய சென்ற போது எதேர்ச்சையாக இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். ரெமஸ் 6000 என்று அந்த ரோபோ நீர் மூழ்கி கப்பல் இந்த கப்பலை கண்டுபிடித்துள்ளது. கொலம்பியா கடலின் அடிப்பகுதியில் ஆழத்தில் இந்த கப்பல் இருந்துள்ளது. ஆனால் சரியான இடம் எதுவென்று யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. சரியான இடம் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

புதையல்
இந்த கப்பல் முழுக்க தங்கம், வெள்ளி, வைரம் இருந்துள்ளது, நிறைய நகைகள் அப்படியே இருந்துள்ளது. இதன் மதிப்பு 1.156 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பழையது என்பதால் சாதாரண தொகையைவிட அதிக விலைக்கு விற்பனை ஆகும். எல்லாமே ராஜா வம்சத்து நகைகள் ஆகும்.

ராஜா
தென் அமெரிக்காவில் இருந்து ஸ்பெயினின் ஐந்தாவது மன்னர், பிளிப்பிற்கு இந்த நகைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்போது நடந்த ஸ்பெயின் போரில் உதவுவதற்காக இந்த கப்பலை அனுப்பியுள்ளனர். அப்போது ஸ்பெயின், தென் அமெரிக்காவின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. அப்போது நடந்த போர் காரணமாக இந்த கப்பல் இடமாறியுள்ளது.

பிரச்சனை
இதற்கு தென்னமெரிக்கவும், ஸ்பெயினும் உரிமை கோரியுள்ளது. அதே சமயம் கொலம்பியா இது எங்கள் சொத்து என்று கிளம்பி வந்துள்ளது. தங்கள் நாட்டு கடல் பகுதியில் கிடைத்ததால் விதிப்படி இது எங்கள் சொத்துதான் என்று கூறியுள்ளது. சர்வதேச கடல் விதிகளின்படி, இந்த புதையலை கொலம்பியா உரிமை கோர எல்லா உரிமையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!