For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூழ்கி வரும் ‘வெனிஸ்’ நகரம்: செயற்கைக் கோள்கள் உதவியுடன் விஞ்ஞானிகள் தகவல்

Google Oneindia Tamil News

வெனிஸ்: ஆண்டுதோறும் 1 மி.மீ அளவிற்கு இயற்கையாகவே வெனிஸ் நகரம் மூழ்கி வருவதாக செயற்கைக் கோள் ஆதாரத்துடன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான தமிழ்ப்படங்களிம் குறுக்கும், நெடுக்குமாக ஓடும் கால்வாய்களில், மிதந்த படியே ஆடிப்பாடுவார்களே நமது நாயகர்கள். அந்த அழகிய காட்சிகள் பெரும்பாலும் வெனிஸ் நகரத்தில் எடுக்கப் பட்டவைகளாகத் தான் இருக்கும்.

நகரெங்கும், குறுக்கும் நெடுக்குமாக ஓடும் கால்வாய்களை ரசிப்பதற்காகவே இங்கு ஆண்டுதோறும் லட்சக் கணக்கில் சுற்றுலாப் பயனிகள் வந்து குவிகிறார்கள். ஆனால், தற்போது வருடந்தோறும் சிறிது சிறிதாக வெனிஸ் நகரம் மூழ்கி வருவதாகவும், இந்த நிலை நீடித்தால் பல நூறு வருடங்களுக்குப் பிறகு வெனிஸ் நகரமே இருக்காது எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மிதக்கும் நகரம்...

மிதக்கும் நகரம்...

ஐரோப்பாவின் மிதக்கும் நகரம் என்ற பெருமை வெனிஸிற்கு உண்டு.

முக்கியப் போக்குவரத்து....

முக்கியப் போக்குவரத்து....

நகரெங்கும் குறுக்கும், நெடுக்கும் ஓடும் கால்வாய்களே இந்நகரத்தின் முக்கியப் போக்குவரத்து வழியாக உள்ளது.

செயற்கைக் கோள் மூலம்...

செயற்கைக் கோள் மூலம்...

வருடந்தோரும் இந்த நகரம் 1மிமீ அள்வில் தண்ணீருக்குள் மூழ்கி வருகின்றது என்ற அதிர்ச்சித் தகவலை தற்போது நவீன செயற்கைக்கோள்களின் உதவியுடன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளானர்.

மனிதன் கொஞ்சம், இயற்கை கொஞ்சம்....

மனிதன் கொஞ்சம், இயற்கை கொஞ்சம்....

மனித நடவடிக்கைகளால் இந்த நகரம் ஆண்டுதோறும் 0.8 லிருந்து 2 முதல் 10 மி.மீ வரை மூழ்கி வருவதாக ஏற்கனவே தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில், இயற்கையாகவும் ஆண்டுதோறும் 0.8 லிருந்து 1 மி.மீ வரை வெனிஸ் நகரம் மூழ்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வெனிஸுக்கு ஆபத்து....

வெனிஸுக்கு ஆபத்து....

இரண்டு விதத்திலும் தோன்றும் அளவுகளின் வேறுபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டாலும், ஏற்கெனவே ஆண்டிற்கு நான்கு முறை அதிகரித்துவரும் நீர்மட்டத்தால் நகருக்கு ஏற்படும் ஆபத்து எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கண்காணிப்பு அவசியம்....

கண்காணிப்பு அவசியம்....

அருகில் உள்ள கடல்நீரின் மட்டம் உயருவது வெனிஸ் நகரத்தைப் பாதிக்கும் என்பதால் இதுகுறித்த தொடர் கண்காணிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என இத்தாலியின் படுவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான பியட்ரோ டீட்டினி தெரிவித்துள்ளார்.

தொடரும் அபாயம்....

தொடரும் அபாயம்....

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னரே, வெனிஸ் நகரில் நிலத்தடி நீர் வெளியேற்றப்படும்போது நகரம் கீழிறங்குவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். தடுப்பு நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப் பட்ட பின்னரும் நகரம் தொடர்ந்து கீழிறங்கிக் கொண்டிப்பது தொடர்வதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நீர்மட்ட தகவல்கள்...

நீர்மட்ட தகவல்கள்...

முதலாவது செயற்கைக்கோள் மூலம் பெறும் தகவல்கள் கொண்டு மாதம் ஒருமுறை இவர்கள் அறிக்கைகள் தயார் செய்யும்போது, இரண்டாவது நவீன செயற்கைக்கோள் மூலம் பத்து நாட்களுக்கு ஒருமுறை இவர்கள் நீர்மட்டம் குறித்த தகவல்களைப் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Modern satellites are helping scientists monitor how quickly Venice — the "floating city" of romance — is sinking with an unprecedented level of resolution. The results show the city is naturally subsiding at a rate of about 0.8 to 1 millimetre per year, while human activities contribute sinking of about 0.08 to 2 to 10 mm per year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X