For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய குக்கிராமங்களில் கூட இன்டர்நெட், ஸ்கைப்: வாவ் என வாய் பிளந்த சத்யா நாதெல்லா

By Siva
Google Oneindia Tamil News

சான் ஹோசே: தனது பள்ளிப்பருவத்தின்போது இருந்த தனது சொந்த ஊர் தற்போது வெகுவாக முன்னேறிவிட்டதாக மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் வேலியில் இன்று நடந்த டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். முன்னதாக அவர் மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்யா நாதெல்லா உள்பட 350 சிஇஓக்களை சந்தித்து பேசினார்.

இந்நிலையில் டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் பேசிய நாதெல்லா கூறுகையில்,

ஆசிரியர்கள்

ஆசிரியர்கள்

1970ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளத்தில் இரண்டு பேர் தார்பாய்களில் படுத்துக் கொண்டு இரண்டு டிரான்சிஸ்டர் ரேடியாக்களை கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் பள்ளி ஆசிரியர்கள். கல்வி கற்றுக் கொடுப்பதை கைவிட முடிவு செய்தவர்கள். அவர்களைப் பற்றி நான் அவ்வப்போது நினைப்பது உண்டு. அவர்கள் தற்போது என்னவெல்லாம் சாதித்திருக்க முடியும் என நான் நினைப்பது உண்டு.

ஸ்கைப்

ஸ்கைப்

தற்போது இந்தியாவில் வியக்கும் வகையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நான் ஒரு குக்கிராமத்திற்கு சென்றிருந்தேன். என்ன ஆச்சரியம், அந்த கிராமத்து மாணவர்கள் ஸ்கைப் பயன்படுத்தியதுடன் தொழில்நுட்பம் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

கிராமங்கள்

கிராமங்கள்

இந்தியாவில் உள்ள 5 லட்சம் கிராமங்களுக்கு தொழில்நுட்பத்தை எடுத்துச் செல்வது என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியா

இந்தியா

உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை இந்தியாவுக்கு கொண்டு செல்வதும், இந்தியாவின் டிஜிட்டல் பாதுகாப்புகளை மதிப்பதும் எங்களின் முக்கிய குறிக்கோள் ஆகும் என்றார் நாதெல்லா.

English summary
Microsoft CEO Satya Nadella spoke about the transition in India since his childhood days at the Digital India meet held in Silicon Valley.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X