For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவுதி அரேபியாவில் முதல் முறையாக முக்கியமான துறைக்கு துணை அமைச்சராக பெண் நியமனம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

துபாய்: சவுதி அரேபியாவில் துணை அமைச்சர் பதவியில் பெண் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நாட்டில், நடைபெற்று வரும் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபிய அரசர் சல்மான் அதிரடியாக ராணுவ தலைவர்களை மாற்றம் செய்துள்ளார். இந்த நிலையில் துணை அமைச்சர் அந்தஸ்தில் பெண் ஒருவரையும் அவர் நியமித்துள்ளார். சமூக முன்னேற்றம் மற்றும் தொழிலாளர் நலத்துறையில் டாக்டர் தாமாதர் பின்ட் யூசுப் அல் ரம்மா என்பவர் துணை அமைச்சராாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Saudi Arabia appoints first female deputy minister of labour

இதுபோன்ற முக்கிய துறையில் பெண் ஒருவர் துணை அமைச்சராக நியமிக்கப்படுவது அந்த நாட்டில் முதல் முறையாகும் என்பதால் முக்கியத்துவமாக பேசப்படுகிறது.

இவர் ரோடியோலஜி மற்றும் மருத்துவ இன்ஜினியரிங் துறையில் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி படித்தவர். 2016ல் சவுதி அரேபியாவின் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இருந்தார்.

English summary
Dr. Tamader bint Youssef Al Rammah has been appointed deputy minister of labour and social development in Saudi Arabia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X