For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானுக்கு இனி கடன் தர மட்டோம்:.. ஆயிலும் தர மாட்டோம்.. சவுதி அரேபியா அதிரடி முடிவு

Google Oneindia Tamil News

ரியாத்: காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்காததற்காக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் . குரேஷி சவுதி அரேபியாவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இதனால் கோபம் அடைந்த சவுதி அரேபியா இனி பாகிஸ்தானுக்கு கடன் தர மாட்டோம் என அறிவித்துள்ளதுடன், இனி ஆயிலும் வழங்க மாட்டோம் என அறிவித்துள்ளது.

Recommended Video

    Pakistanக்கு இனி கடன், எண்ணெய் இல்லை : Saudi Arabia அதிரடி

    சவூதி அரேபியா பாகிஸ்தானுக்கு கடன் மற்றும் எண்ணெய் விநியோகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளால், இரு நாடுகளுக்கும் இடையிலான பல்லாண்டு கால நட்புறவு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இந்தியா கடந்த ஆண்டு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதன் மூலம் காஷ்மீர் மாநிலத்தில் இந்தியாவின் அனைத்து சட்டங்களும் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவின் ஒரு பகுதியாக முழுமையாக மாறியது. இந்தியர்கள் அனைவரும் அங்கு இடம் வாங்கலாம் என்கிற நிலை உருவாகி உள்ளது.

    விபி துரைசாமி பற்ற வைத்த நெருப்பொன்று.. டென்ஷனான அதிமுக.. ஏகப்பட்ட குஷியில் திமுக.. லாபம் யாருக்கு?விபி துரைசாமி பற்ற வைத்த நெருப்பொன்று.. டென்ஷனான அதிமுக.. ஏகப்பட்ட குஷியில் திமுக.. லாபம் யாருக்கு?

    பாக்கிற்கு ஆதரவு

    பாக்கிற்கு ஆதரவு

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கடுமையாக விமர்சித்து வரும் பாகிஸ்தான், உலக நாடுகளின் ஆதரவை கோரியது. பாகிஸ்தானுக்கு சீனா, மலேசியா, துருக்கி உள்ளிட்ட 3 நாடுகள் மட்டுமே ஆதரவு அளித்தன. சீனா கூட உறுதியான ஆதரவை அளிக்கவில்லை. அதற்கு லடாக் மட்டுமே பிரச்சனையாக தெரிந்தது. மற்றபடி காஷ்மீரை கண்டுகொள்ளவில்லை.

    காஷ்மீர் விவகாரம்

    காஷ்மீர் விவகாரம்

    இந்நிலையில் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் பாகிஸ்தானுக்கு காஷ்மீர் விஷயத்தில் எந்த ஆதரவும் அளிக்கவில்லை. கண்டுகொள்ளவும் இல்லை.இதனால் பாகிஸ்தான் கோபத்திலும் விரக்தியிலும் இருந்தது. இந்நிலையில் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்காத சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளை (oic) வெளிப்படையாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தார். காஷ்மீர் குறித்து விவாதிக்க உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் oicக்கு மிரட்டல் விடுத்தார்

    கடனை திருப்பி செலுத்துங்கள்

    கடனை திருப்பி செலுத்துங்கள்

    இதனால் கடும் கோபம் அடைந்த சவுதி அரேபியா, பாகிஸ்தானுக்கு வழங்கிய கடனை உடனே திருப்பி தருமாறு எச்சரித்தது. நவம்பர் 2018 இல் சவுதி அரேபியா அறிவித்த 6.2 பில்லியன் டாலர் தொகுப்பின் ஒரு பகுதியாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை திருப்பிச் செலுத்தவும் பாகிஸ்தான் கட்டாயப்படுத்தப்பட்டது. அதில் மொத்தம் 3 பில்லியன் டாலர் கடன்களும், 3.2 பில்லியன் டாலர் எண்ணெய்யும் கடனாக சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு கொடுத்திருந்தது.

    எண்ணெய் தர மாட்டோம்

    எண்ணெய் தர மாட்டோம்

    கடந்த ஆண்டு பிப்ரவரியில் சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு பயணம் செய்தபோது இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக மத்திய கிழக்கு கண்காணிப்பு செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் எச்சரித்த பாகிஸ்தானுக்கு இனி கடனும் வழங்க மாட்டோம் என்றும் ஆயிலும் விநியோகிக்க மாட்டோம் என்று சவுதி அரேபியா முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் உடனான பல்லாண்டு நட்பை சவுதி அரேபியா முறித்துக்கொண்டுள்ளது.

    English summary
    With Saudi Arabia ending loan and oil supply to Pakistan, the decade-long friendship between the two countries has finally ended.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X