For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காபி கொடுக்க காலதாமதம்... இளம்பெண் மீது கொதிநீரை ஊற்றிய முதலாளி கைது

Google Oneindia Tamil News

ரியாத்: காபி கொடுக்க காலதாமதமானதால் வேலைக்காரி மீது கொதிக்கும் வெண்ணீரை ஊற்றிய ரியாத் முதலாளியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பாத்மா (23) என்ற இளம்பெண் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் உள்ள வீடொன்றில் வீட்டு வேலை செய்வதற்காக சென்றார். சம்பவம் நடந்த அன்று பாத்மாவிடம் அவரது முதலாளி குடிப்பதற்கு காபி கேட்டுள்ளார். அதனை தயாரித்து எடுத்து வருவதற்கு பாத்மாவிற்கு சிறிது நேரம் ஆகி விட்டதாம்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது முதலாளி சூடான தண்ணீரை பாத்மாவின் மீது ஊற்றி உள்ளார். இதில் பாத்மாவின் பின்புறம் முழுவதிலும் பலத்த காயம் உண்டானது.

வலியால் துடித்த பாத்மாவை மற்ற பணியாளர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். உடனடியாக பாத்மாவின் உறவினர்களுக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப் அப்ட்டது.

பாத்மாவின் நிலைமையை நேரில் பார்த்த அவரது உறவினர் ஒருவர், அவரின் காயத்தை புகைப்படமாக எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், சம்மந்தப்பட்ட முதலாளிக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.

அவரது முயற்சிக்கு உடனடியாக பலன் கிடைத்தது. பேஸ்புக்கில் பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் இளம்பெண்ணின் முதலாளி கைது செய்யப்பட்டார்.

தற்போது தீவிர சிகிச்சை பெற்று வரும் பாத்மாவிற்கு பிலிப்பைன்ஸ் நாட்டு தூதரகம் தேவையான உதவிகளை செய்து தருவதாக தெரிவித்துள்ளது. சில பாதுகாப்பு காரணங்களுக்காக பாதிக்கப் பட்ட பெண் மட்டும் அவரது முதலாள் குறித்த தெளிவான விவரங்களை வெளியிட சவுதி அரேபிய போலீசார் போலீசார் மறுத்துவிட்டனர்.

English summary
A Filipino maid has appealed for help after her Saudi Arabian employer caused her horrific burns by throwing boiling water on her body, ABS-CBN News reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X